யூரோ 2020 தகுதிச் சுற்று: பெல்ஜியம், நெதர்லாந்து வெற்றி

யூரோ 2020 கால்பந்து போட்டி தகுதிச் சுற்று ஆட்டங்களில் பெல்ஜியம், நெதர்லாந்து அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
கோல் அடித்த மகிழ்ச்சியில் பெல்ஜியம் வீரர்கள்.
கோல் அடித்த மகிழ்ச்சியில் பெல்ஜியம் வீரர்கள்.


யூரோ 2020 கால்பந்து போட்டி தகுதிச் சுற்று ஆட்டங்களில் பெல்ஜியம், நெதர்லாந்து அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்து பிரசித்தி பெற்றது யூரோ கோப்பை போட்டியாகும். வரும் 2020-இல் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. நடப்பு சாம்பியனாக போர்ச்சுகல் அணி திகழ்கிறது.
பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற தகுதி ஆட்டம் ஒன்றில் வலுவான பெல்ஜியம் 3-1  என்ற கோல் கணக்கில் ரஷியாவை வீழ்த்தியது. உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது பெல்ஜிய என்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர வீரர் ஈடன் ஹசார்ட் அற்புதமாக 2 கோல்களை அடித்தார்.
ராட்டர்டாமில் நடைபெற்ற தகுதி ஆட்டத்தில் வலுவான நெதர்லாந்து 4-0 என பெலாரஸை தோல்வியுறச் செய்தது. சைப்ரஸ் 5-0 என சான்மரினோவையும், கஜஸ்காந் 3-0 என ஸ்காட்லாந்தையும் வீழ்த்தின.
உலகக் கோப்பை ரன்னர் அணியான குரோஷியா 2-1 என போராடி அஜர்பைஜானை வீழ்த்தியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com