முதல் ஒருநாள் பாகிஸ்தானை வென்றது ஆஸி.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
ரன்களை குவித்த பின்ச்}ஷான் மார்ஷ்.
ரன்களை குவித்த பின்ச்}ஷான் மார்ஷ்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் முதலில் ஆடிய பாக். அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 280 ரன்களை குவித்தது. ஹாரிஸ் சோஹைல் 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 101 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார் உமர் அக்மல் 48, ஷேன் மசூத் 40, ரன்களை சேர்த்தனர். 
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49-ஆவது ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 281 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் பின்ச் அற்புதமாக ஆடி 4 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 116 ரன்களை விளாசினார். ஷான் மார்ஷ் 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 91 ரன்களுடனும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 30 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸி. கேப்டன் பின்ச் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com