மியாமி ஓபன்:பெடரர் வெற்றி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ரோஜர் பெடரர் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 
மியாமி ஓபன்:பெடரர் வெற்றி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ரோஜர் பெடரர் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 
சனிக்கிழமை இரவு நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 46-ஆம் நிலை வீரர் ராடு அல்போட்டிடம் 4-6 என முதல் செட்டை இழந்த பெடரர். பின்னர் சுதாரித்து ஆடி அடுத்த  2 செட்களை 7-5, 6-3 என கைப்பற்றினார். இதன் மூலம் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.
செர்பிய வீரர் பிலிப் கிராஜிநோவிக் 5-7, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்காவை வென்றார்.
நம்பர் ஓன் வீராங்கனை ஓஸாகா அதிர்ச்சி: 
மியாமி டிபிள்யுடிஏ போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒஸாகா 6-4 என முதல் செட்டை சீன தைப்பே வீராங்கனை ஹை சு வெயை வென்றார். ஆனால் அடுத்த 2 செட்களை 7-6, 6-3 என கைப்பற்றி வென்றார் சுவெய். இந்தியன்வெல்ஸ் போட்டியிலும் ஒஸாகா நான்காம் சுற்றோடு வெளியேறினார்.
கரோலின் வோஸ்னியாக்கி 6-4, 7-6 என ருமேனியாவின் மோனிகாவை வீழ்த்தினார். உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் டோனா வேகிக்கையும், கரோலினா கார்ஸியா 6-0, 7-5 என ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜûஸயும் வென்றனர். மற்றொரு முன்னணி வீராங்கனை செரீனாúô வில்லியம்ஸ் மூட்டு காயத்தால் ஓய்வு பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com