2-ஆவது ஒருநாள்: ஆஸ்திரேலியா வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.
2-ஆவது ஒருநாள்: ஆஸ்திரேலியா வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.
இரு  அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்களை குவித்தது பாகிஸ்தான்.
11 பவுண்டரிகளுடன் 126 பந்துகளில் 115 ரன்களை விளாசினார் முகமது ரிஸ்வான். அவருக்கு உறுதுணையாக கேப்டன் ஷோயிப் மாலிக் 60, ஹாரிஸ் சோஹைல் 34 ரன்களை சேர்த்தனர்.
ஆஸி. தரப்பில் ஹை ரிச்சர்ட்ஸன், நாதன் நைல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நாதன் லயன், ஆடம் ஸம்பா, பின்ச் தலா 1 விக்கெட்டை சாய்த்தனர்.
பின்னர் ஆடிய ஆஸி.அணி தொடக்க வீரர்கள் உஸ்மான் காஜா, கேப்டன் பின்ச் ஆகியோர் அற்புத ஆட்டத்தால் 47.5 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 285 ரன்களை எடுத்து வென்றது.
6 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 143 பந்துகளில் 153 ரன்களை விளாசினார் பின்ச். 8 பவுண்டரியுடன் 88 ரன்களை சேர்த்தார் காஜா.
பாக். தரப்பில் யாசிர் ஷா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.இந்த வெற்றி மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com