ஐபிஎல் 2019: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் கடைசி 2 அணிகள்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஐபிஎல் 2019 சீசன் லீக் போட்டிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை, தில்லி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன.
ஐபிஎல் 2019: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் கடைசி 2 அணிகள்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு


ஐபிஎல் 2019 சீசன் லீக் போட்டிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை, தில்லி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 2 இடங்களுக்கு தகுதி பெறும் அணிகள் எவை என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவில் அதிக ரசிகர்கள் விரும்பி பார்க்கும் போட்டிகளில் பிரதான இடம் வகிப்பது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியாகும் . 2019 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 23-ஆம் தேதி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாக் அவுட் எனப்படும் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்க உள்ளன.
ஏற்கெனவே பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ள தில்லி, சென்னை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 2 இடங்களில் நுழையும் அணிகள் எவை என்ற பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இதற்கான பந்தயத்தில் மும்பை, ஹைதராபாத், பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் உள்ளன. 
மும்பை இந்தியன்ஸ்
மும்பை தற்போது 14 புள்ளிகளுடன் பட்டியலில் 3-ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் ஓரே ஆட்டத்தில் வென்றால் மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும். ரன் சராசரி அடிப்படையில் ஹைதராபாதுக்கு அடுத்துள்ளது மும்பை. அனைத்து அணிகளும் 14 புள்ளிகள் பெற்றிருந்தாலும், மும்பை ரன் சராசரி அடிப்படையில் தகுதி பெறும்.
அடுத்துள்ள ஓரே இடத்துக்கு ஹைதராபாத், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. 
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணி தற்போது மும்பை, பெங்களூரு  அணிகளுடன் மோத வேண்டும். 2 ஆட்டங்களிலும் வென்றால் தான் ஹைதராபாத் 16 புள்ளிகளை பெற முடியும் ஒரு ஆட்டத்தில் வென்றால் 14 புள்ளிகளுடன் அந்த அணி ஏனையஅணிகளுடன் போட்டி போட வேண்டும். 8 அணிகள் மத்தியில் சிறந்த ரன் சராசரியுடன் உள்ளது ஹைதராபாத். அந்த அணியும் 14 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்தாலும் தகுதி பெற்று விடும்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
கொல்கத்தா அணி அடுத்த 2 ஆட்டங்களில் வென்றால் 14 புள்ளிகள் பெறும். அதன் ரன் சராசரி 0.100 என உள்ள நிலையில், 2 வெற்றிகள் மூலம் மேலும் உயரும். அதே நேரத்தில் மும்பை, பெங்களூருவிடம்  ஹைதராபாத் தோற்க வேண்டும். ராஜஸ்தானும் பெங்களூரு, தில்லியிடம் தோற்றால் கொல்கத்தா சராசரி விகிதம் தேவையின்றி முன்னேறும்.12 புள்ளிகளை மட்டுமே பெற்று ஏனைய 3 அணிகளும் 12 புள்ளிகளுடன் இருந்தால், ரன் சராசரி அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
பஞ்சாப் அணி கடந்த சீசனிலும் நல்ல நிலையில் இருந்த போதும், தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோற்றதால் பிளேஆஃப் சுற்றில் நுழையவில்லை. ஹைதராபாதுடன் பெற்ற தோல்வி பஞ்சாபை சிக்கலான நிலைக்கு தள்ளியுள்ளது. கடைசி 2 ஆட்டங்களில் வென்றாலும், பஞ்சாப் பிளேஆஃபுக்கு தகுதி பெற முடியாத நிலை உள்ளது.
ஹைதராபாத் 2 ஆட்டங்களில் வென்றாலோ அல்லது மும்பை, கொல்கத்தாவை வென்றாலோ பஞ்சாப் தனது வாய்ப்பை இழந்து விடும். அதன் ரன் சராசரியும் குறிப்பிடும்படியாக இல்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் அணி 2 ஆட்டங்களில் வென்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் உள்ளது. ஹைதராபாத்  2 வெற்றிகளை பெற்றாலோ, மும்பை கொல்கத்தாவை வென்றாலோ ராஜஸ்தான் வெளியேற வேண்டிய நிலை  ஏற்படும். குறைவான ரன் சராசரியால் ராஜஸ்தான் சிக்கலில் உள்ளது. 12 புள்ளிகளுடன் அனைத்து அணிகளும் மோதினாலும், ரன் சராசரியால் ராஜஸ்தான் தகுதி பெறாது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
பெங்களூரு அணிக்கு ஏறக்குறைய வாய்ப்புகள் முடிந்து விட்ட நிலையில், ஏதாவது மாயம் நிகழ்ந்தால் தான் அந்த  அணி தகுதி பெற முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com