ஸ்பெயின் கால்பந்து கோல்கீப்பருக்கு பயிற்சியின்போது மாரடைப்பு

ஸ்பெயின் கால்பந்து அணியின் கோல்கீப்பரும், போர்ச்சுகல் கிளப் அணியான எஃப்சி போர்டோ அணியின் வீரருமான இகர் கேஸிலஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 37 வயது மூத்த வீரரான இவர், ஸ்பெயின் கால்பந்து அணிக்காக 167 ஆட்டங்களிலும், ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக 500க்கும் மேற்பட்ட ஆட்டங்களிலும்  விளையாடியுள்ளார். போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கேஸிலஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com