9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி; வெளியேறியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு வந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி; வெளியேறியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு வந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது மும்பை. இதைத்தொடர்ந்து, முதலில் விளையாடிய கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை, 16.1 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா அரை சதம் (55 ரன்கள்) பதிவு செய்தார்.
கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுபமான் கில் 9 ரன்கள் எடுத்திருந்தபோது ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.
கிறிஸ் லின்னும், ராபின் உத்தப்பாவும் சிறப்பாக விளையாடினர். 8.2ஆவது ஓவரில் ஹார்திக் பாண்டியா வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார் கிறிஸ் லின்.
அப்போது அவர் 29 பந்துகளில் 41 ரன்கள் (4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) எடுத்தார். உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் தினேஷ் கார்த்திக். உத்தப்பா ஒருபக்கம் ரன் குவிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், தினேஷ் கார்த்திக் 3 ரன்களில் பெவிலியன் சென்றார். ஆண்ட்ரூ ரசலும் ரன்கள் எதுவுமின்றி ஏமாற்றினார். நிதீஷ் ராணா 26 ரன்களிலும், உத்தப்பா 40 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சுனில் நரேன் ஆட்டமிழக்காமல் ரன்கள் எதுவும் இன்றி களத்தில் இருந்தார். இவ்வாறாக 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.
மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக மலிங்கா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா, ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர், விளையாடி மும்பை தொடக்க ஆட்டக்காரர் குவின்டன் டி காக் அதிரடி காட்டினார். 6.1ஆவது ஓவரில் அவர் கேட்ச் ஆனார். அப்போது 23 பந்துகளில் 30 ரன்களை எடுத்திருந்தார். பின்னர் ரோஹித்துடன் சூர்யகுமார் யாதவ் களம் இறங்க இருவரும் அணியை வெற்றி அடையச் செய்தனர். 14.4ஆவது ஓவரில் ரோஹித் அரை சதம் பதிவு செய்தார். சூர்ய குமார் யாதவ் 46 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றி மூலம் 14 ஆட்டங்களில் விளையாடி 18 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்பையில் முதலிடத்துக்கு முன்னேறியது மும்பை. முதலிடத்தில் இருந்த சிஎஸ்கே 2ஆவது இடத்துக்கு வந்தது.
கொல்கத்தா தோல்வி அடைந்ததால், ரன்ரேட் அடிப்படையில் 4ஆவது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com