ஐபிஎல்: இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை:  6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது

6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி.
ஐபிஎல்: இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை:  6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது

இன்றைய போட்டியில்  தில்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகும் என்பதால் இருஅணிகளும் வெற்றி பெற முனைப்பு காட்டின.
போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து தில்லி அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினர். இதில் ப்ரித்வி ஷா  5 ரன்கள் எடுத்த நிலையில் 3 வது ஓவரில்  தீபக் சஹார் பந்தில் ஆட்டமிழந்தார். ஷிகார் தவான் 18 ரன்களில் ஹர்பஜன் சிங் பந்தில் கேச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தில்லி அணியில் கொலின் மன்ரோ 27, ஷிரேயாஸ் அய்யர் 13, ரிஷாப் பந்த் 38, ஆக்ஸர் படேல் 3,  ரூதர்போர்ட் 10, கீமோ பால் 6, அமித் மிஸ்ரா 6, ட்ரென்ட் போல்ட் 6, இஷாந்த் சர்மா 10 ரன்கள் என  9 விக்கெட்டை இழந்தது தில்லி அணி 147 ரன்களை எடுத்தது.
சென்னை அணி 148 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது.
அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக டு ப்லெஸிஸ், ஷேன் வாட்சன் களமிறங்கினார்கள்.
இதில் டு ப்லெஸிஸ் சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் 1 சிக்ஸ், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார். இதேபோல் ஷேன் வாட்சன் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்களை எடுத்தார். சென்னை அணியில் இவர்கள் இருவர் மட்டுமே அரை சதம் எடுத்தனர். மேலும் சுரேஷ் ரெய்னா 11, அம்பட்டி ராயுடு 20, தோனி 9, பிராவோ 4 ரன்கள் எடுக்க 19 ஓவரில் அணியின் ரன் 151 ஆனது. இதன் மூலம்  6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி.
மே12 ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com