ஹார்திக் பாண்டியாவின் திறமைக்கு நிகராக வேறு யாருமில்லை: சேவாக் புகழாரம்

ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவின் திறமைக்கு நிகராக இந்திய அணியில் வேறு எந்த வீரரும் இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் புகழாரம் சூட்டினார்.

கிரிக்கெட் தொடர்பான செய்தி இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஹார்திக் பாண்டியா மிகவும் திறமையான வீரர். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அவரது திறமைக்கு நிகராக வேறு எந்த வீரரும் இந்திய அணியில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்ததற்காக போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடையை எதிர்கொண்டிருந்த ஹார்திக் பாண்டியா, உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதில்  வீரராக இவரது பங்கு இன்றியமையததாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com