செய்திகள் சில வரிகளில்...

பெர்த்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலிய ஹாக்கி அணியுடனான கடைசி ஆட்டத்தில் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது இந்தியா. உலக


பெர்த்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலிய ஹாக்கி அணியுடனான கடைசி ஆட்டத்தில் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது இந்தியா. உலக சீரிஸ் ஹாக்கி பைனல் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி சுற்றுப் பயணம் செய்து ஆஸி. தேசிய மற்றும் ஏ அணிகளுடன் மோதியது குறிப்பிடத்தக்கது.

நாட்டிங்ஹாமில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் மார்க் உட் வீசிய பந்தில் இடது முழங்கையில் காயமடைந்து வெளியேறினார் பாகிஸ்தான் இளம் வீரர் இமாம் உல் ஹக். உலகக் கோப்பை போட்டி தொடங்க உள்ள நிலையில் அவர் காயமடைந்தது, பாக். அணி நிர்வாகத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 30-ஆம் தேதி தொடங்கவுள்ள 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ பாடல் (ஸ்டேன்ட் பை) ஐசிசி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. பாடகர் லாரின் புதிய பாடலை உருவாக்கி உள்ளார்.


ஐஎஸ்எல் அணிகளில் ஒன்றான சென்னையின் எஃப்சி கால்பந்து வீரர் எட்வின் வன்ஸ்பாலை இரண்டு ஆண்டுக் காலத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஐ லீக் சாம்பியன் சென்னை சிட்டி எஃப்சி அணியின் முதுகெலும்பாக திகழ்ந்தார் எட்வின் வன்ஸ்பால். ஸ்ட்ரைக்கர், விங்கர், சென்ட்ரல் மிட் பீல்டர், என பல முனைகளில் ஆடக்கூடியவர் எட்வின்.

தில்லி கேபிடல்ஸ் அணி பயிற்சியாளர் பாண்டிங், ஆலோசகர் செüரவ் கங்குலி ஆகியோரிடம் இருந்து கிரிக்கெட்டை மனதளவில் எவ்வாறு எதிர்கொள்வது, அழுத்தமான நேரத்தில் ஆடுவது போன்றவை குறித்து கற்றுக் கொண்டேன் என இளம் வீரர் பிரித்வி ஷா கூறியுள்ளார்.

மகளிர் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா ஒரு தூங்கும் யானையைப் போன்றது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக ஆடக்கூடிய வீராங்கனைகள் அதில் உள்ளனர் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் மேத்யூ மோட் கூறியுள்ளார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் நாற்காலியை தூக்கி வீசி,ராக்கெட்டை கீழே வீசிய வீரர் நிக் கிர்ஜியோஸ் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com