தேசிய இளையோர் கூடைப்பந்து: ராஜஸ்தான், குஜராத் அணிகள் வெற்றி

கோவையில் நடைபெற்று வரும் தேசிய  இளையோர் கூடைப்பந்து போட்டியின் 4-ஆவது நாள் ஆட்டங்களில் ராஜஸ்தான், குஜராத் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
கோவையில் நடைபெற்று வரும் தேசிய இளையோர் கூடைப்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மோதிய மகாராஷ்டிரம் - ஹரியாணா அணி வீரர்கள்.
கோவையில் நடைபெற்று வரும் தேசிய இளையோர் கூடைப்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மோதிய மகாராஷ்டிரம் - ஹரியாணா அணி வீரர்கள்.


கோவை: கோவையில் நடைபெற்று வரும் தேசிய  இளையோர் கூடைப்பந்து போட்டியின் 4-ஆவது நாள் ஆட்டங்களில் ராஜஸ்தான், குஜராத் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

ஆடவர் பிரிவில் 25 மாநிலங்களின் அணிகளும், மகளிர் பிரிவில் 24 மாநிலங்களைச் சேர்ந்த அணிகளும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. 
 லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளிக்கிழமை 4-ஆவது நாள் ஆட்டங்கள் நடைபெற்றன. ஆடவர் பிரிவு முதல் ஆட்டத்தில், குஜராத் அணியை எதிர்த்து ஜார்க்கண்ட் அணி விளையாடியது. இதில் குஜராத் அணி 72 - 66 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. 2-ஆவது ஆட்டத்தில் ஹரியாணா அணி 83 - 55 என்ற புள்ளிகள் கணக்கில் மகாராஷ்டிரத்தை வீழ்த்தியது. 3-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 59 - 55 என்ற புள்ளிகள் கணக்கில் கேரளத்தையும், 4-ஆவது ஆட்டத்தில் தெலங்கானா அணி 90 - 50 என்ற புள்ளிகள் கணக்கில் ஹிமாச்சல பிரதேச அணியையும் வீழ்த்தின. 5-ஆவது ஆட்டத்தில் உத்திரப் பிரதேச அணி 74 - 33 என்ற புள்ளிகள் கணக்கில் பிகாரை வீழ்த்தியது. 

மகளிர் பிரிவு முதல் ஆட்டத்தில் குஜராத் அணி 66 - 25 என்ற புள்ளிகள் கணக்கில் அஸ்ஸாமை வீழ்த்தியது. 2-ஆவது ஆட்டத்தில் மகாராஷ்டிர அணி 76- 40 என்ற புள்ளிகள் கணக்கில் மத்தியப் பிரதேசத்தையும், 3-ஆவது ஆட்டத்தில் தெலங்கானா அணி 61 - 56 என்ற புள்ளிகள் கணக்கில் ஹிமாச்சல பிரதேசத்தையும் வீழ்த்தின. அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி  67 - 60 என்ற புள்ளிகள் கணக்கில் பஞ்சாபையும், ஜம்மு காஷ்மீர் அணி 50 - 49 என்ற புள்ளிகள் கணக்கில் ஒடிஸாவையும் வீழ்த்தின. இதைத் தொடர்ந்து 5-ஆவது நாள் லீக் ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com