தொட முடியாது என கருதப்பட்ட சாதனைகளை தகர்த்து வருகிறார் கோலி

தொட முடியாகு எனக் கருதப்பட்ட சாதனைகளை கேப்டன் கோலி தகர்த்து வருகிறார் என 19 வயது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியுள்ளார்.
தொட முடியாது என கருதப்பட்ட சாதனைகளை தகர்த்து வருகிறார் கோலி

தொட முடியாகு எனக் கருதப்பட்ட சாதனைகளை கேப்டன் கோலி தகர்த்து வருகிறார் என 19 வயது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
ஒருநாள் ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உள்ள கோலி, பல்வேறு சாதனைகளை தகர்த்து வருகிறார். குறிப்பாக 54 இன்னிங்களில் துரிதமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சிறப்பை பெற்றார். மேலும் சச்சினின் 49 சதங்களை நெருங்கி உள்ளார். 8 சதங்களே அவருக்கு இன்னும் தேவைப்படுகிறது. 
விராட் கோலி நாளுக்கு நாள் தொடர்ந்து தனது ஆட்டத்தை மெருகேற்றி வருகிறார். கடந்த 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணம் அவருக்கு மோசமான அனுபவமாக அமைந்தது. மேலும் ஆஸ்திரேலியாவிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 
இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலகக் கோப்பையில் இந்திய பவுலர்களின் விக்கெட் வீழ்த்தும் திறமையே நமக்கு நன்மை தரும். இந்தியா சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. குல்தீப், சஹல் ஆகியோரும் சுழற்பந்தில் தங்களை நிரூபித்துள்ளனர்.
மைதான சூழ்நிலைகளை பார்க்கும் போது, இந்த உலகக் கோப்பை அதிக ஸ்கோர்களை குவிக்கும் போட்டியாக அமையும். மிடில் ஓவர்களில் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி வசமாகும். பவுலிங் மிகப்பெரிய பங்கை ஆற்றும் என்றார் திராவிட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com