மகளிர் ஹாக்கி தொடர்: தென்கொரியாவை வென்றது இந்தியா

தென்கொரிய மகளிர் அணிக்கு எதிரான இருதரப்பு ஹாக்கி டெஸ்ட் தொடர் முதல் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
மகளிர் ஹாக்கி தொடர்: தென்கொரியாவை வென்றது இந்தியா

தென்கொரிய மகளிர் அணிக்கு எதிரான இருதரப்பு ஹாக்கி டெஸ்ட் தொடர் முதல் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
உலக ஹாக்கி சீரிஸ் மகளிர் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய தரப்பில் லால்ரேமிசியாமி, நவ்நீத் கெளர் ஆகியோர் அற்புதமாக கோலடித்தனர். தென்கொரியா தரப்பில் ஷின் ஹெஜேயாங் ஓரே கோலை அடித்தார். 5 பெனால்டி கார்னர்களை வீணடித்தது தென்கொரியா.
இந்திய கோல் கீப்பர் சவீதா அபாரமாக கோல்களை தடுத்தார்.
ஏற்கெனவே ஸ்பெயின், மலேசிய தொடர்களில் இந்தியா அபாரமாக ஆடியது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமை இரண்டாவது ஆட்டம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com