உலகக் கோப்பை ஆட்டத்தின் போக்கையே மாற்றிய 10 தருணங்கள்: 1999 உலகக் கோப்பை ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா சூப்பர் சிக்ஸ் ஆட்டம்

ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபார பார்மில் இருந்த தென்னாப்பிரிக்காவும், ஆஸியும் மோதின. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 271-7 ரன்களை குவித்தது.
உலகக் கோப்பை ஆட்டத்தின் போக்கையே மாற்றிய 10 தருணங்கள்: 1999 உலகக் கோப்பை ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா சூப்பர் சிக்ஸ் ஆட்டம்


ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபார பார்மில் இருந்த தென்னாப்பிரிக்காவும், ஆஸியும் மோதின. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 271-7 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய ஆஸி. அணி 48-3 என தத்தளித்துக் கொண்டிருந்தது. கேப்டன் ஸ்டீவ் வாக் பேட்டிங் செய்ய வந்தார். 56 ரன்கள் எடுத்த போது ஸ்டீவ் வாக் அடித்த ஷாட்டை மிட்விக்கெட்டில் பீல்டிங் செய்த தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ் தவற விட்டார். இது ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றில் பெரிய தவறாக மாறியது. இதில் தப்பிய வாக் 120 ரன்களை விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். பின்னர் சாம்பியன் பட்டத்தையும் 
வென்றது ஆஸி.

2019 ஐசிசி உலகக் கோப்பை மைதானங்கள்...

ஓல்ட் டிராபோர்ட் -மான்செஸ்டர்
மொத்த ஆட்டங்கள் - 6
மொத்த பார்வையாளர் எண்ணிக்கை - 24,600

கடந்த 1857-இல் கட்டப்பட்ட இந்த மைதானத்தில் ஒரு அரையிறுதி உள்பட 6 ஆட்டங்கள் நடக்க உள்ளன. லங்காஷையரின் சொந்த மைதானமான இங்கு உலகக் கோப்பையில் பரபரப்பாக அனைவரும் எதிர்நோக்கியுள்ள இந்தியா-பாகிஸ்தான் ஆட்டமும் நடக்கிறது, கடந்த 1979 போட்டி அரையிறுதியில் நியூஸிலாந்தை 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. 

எனினும் 1983 போட்டி அரையிறுதியில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இங்கிலாந்து. கடந்த 1884 முதல் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெற்று வரும் மிகவும் பழைமையான மைதானமான இங்கு அண்மையில் 
ஓய்வு பெற்ற அதிக டெஸ்ட் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பெயர், பெவிலியனுக்கு சூட்டப்பட்டது.

ஆட்டங்கள்


ஜூன் 16-இந்தியா-பாகிஸ்தான்.ஜூன் 18-இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான். ஜூன் 22-மே.இ.தீவுகள்-நியூஸிலாந்து. ஜூன் 27-மே.இ.தீவுகள்-இந்தியா. ஜூலை 6-ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா, ஜூலை 9-அரையிறுதி ஆட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com