அகில இந்திய ஹாக்கி: பெங்களூரு அணி சாம்பியன்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியில் பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன் அணி வீரர்களுடன் பரிசுகளை வழங்கிய விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சின்னப்பன் உள்ளிட்டோர்.

கோவில்பட்டி கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமியுடன் இணைந்து கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் இம்மாதம் 16ஆம் தேதி முதல் அகில இந்திய ஹாக்கி போட்டி நடைபெற்று வந்தது. இதில் 16 அணிகள் பங்கேற்றன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன் அணி, செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியுடன் மோதியது. 
ஆட்ட நேர முடிவில் 5-2  என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.
முன்னதாக நடைபெற்ற மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுக்கான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில், சென்னை ஐ.சி.எப். அணி மும்பை அகில இந்திய கஸ்டம்ஸ் மற்றும் சரக்கு சேவை வரி அணியை வீழ்த்தியது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சின்னப்பன் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com