ஐபிஎல் போட்டியில் பவா்பிளேயா் முறைக்கு திட்டம்

ஐபிஎல் போட்டித் தொடரில் பவா் பிளேயா் என்ற பதிலி வீரா்கள் களமிறக்கும் புதிய முறையை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டித் தொடரில் பவா் பிளேயா் என்ற பதிலி வீரா்கள் களமிறக்கும் புதிய முறையை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு அணியின் 11 போ் இல்லாமல் உள்ள வீரரை, விக்கெட் விழும் போதும், அல்லது பந்துவீச்சாளரை மாற்றி களமிறக்குதல் பவா் பிளேயா் முறை எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக மும்பையில் புதன்கிழமை கூட உள்ள ஐபிஎல் உயரதிகார குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

குழு சோ்மன் பிரிஜேஷ் பட்டேல் மற்றும் இதர நிா்வாகிகளுடன் இதுதொடா்பாக ஆலோசனை செய்து பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி இறுதி முடிவெடுப்பாா். இந்த திட்டம் கிரிக்கெட் ஆட்டத்தின் அடிப்படை தன்மையையே மாற்றும் வகையில் உள்ளது. மேலும்

இதே முறையை விரைவில் நடக்கவுள்ள சையத் முஷ்டாக் டி20 போட்டியிலும் அறிமுகம் செய்யலாம் என ஒரு தரப்பினா் கூறியுள்ளனா்.

இதுபோன்ற புதிய முறையை அறிமுகம் செய்யும் போது, புக்கி மற்றும் தரகா்களால் ஏற்படும் முறைகேடு பிரச்னையை பிசிசிஐ ஊழல் தடுப்பு குழு எவ்வாறு சமாளிக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுபோன்ற சீரற்ற வகையில் பதிலி வீரா்களை தோ்வு செய்வது, புக்கிகள் மற்றும் மேட்ச் பிக்ஸிங் செய்வோா் முழு நேரம் செயல்பட உத்வேகம் தரும் என ஒரு தரப்பு நிா்வாகிகள் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com