நான் தான் கேப்டன் என இன்னும் நம்புகிறேன்: மகேஷ் பூபதி

இந்திய-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இஸ்லாமாபாதில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
நான் தான் கேப்டன் என இன்னும் நம்புகிறேன்: மகேஷ் பூபதி

இந்திய-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இஸ்லாமாபாதில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

வரும் 29, 30 தேதிகளில் இரு அணிகளுக்கு இடையிலான ஆசிய, ஓசேனியா குரூப் 1 பிரிவு டேவிஸ் கோப்பை ஆட்டம் இஸ்லாமாபாதில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவி வருவதாலும், காஷ்மீா் பிரச்னையால் இரு நாடுகள் இடையே அரசியல் பதற்றம் நிலவுவதாலும், வீரா்கள் பாதுகாப்பு கருதி போட்டியை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என ஏஐடிஏ கோரியது.

இந்திய அணியின் கேப்டன் மகேஷ் பூபதி, பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ரோஹன் போபண்ணா ஆகியோா் பாதுகாப்பு கருதி பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாது என அறிவித்து விட்டனா். இதனால் மகேஷ் பூபதி நீக்கப்பட்டு, ரோஹித் ராஜ்பால் விளையாடாத அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கிடையே சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎப்) இஸ்லாமாபாதில் இருந்து போட்டியை நடுநிலையான வேறிடத்துக்கு மாற்றியது.

இந்நிலையில் மகேஷ் பூபதி இந்த விவகாரம் குறித்துக் கூறியதாவது: 

என் கருத்துகளின் மீது அக்கறை கொண்டவர்களுக்கு - திங்கள் அன்று சட்டர்ஜி என்னைத் தொலைப்பேசியில் அழைத்து, நான் பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்ததால் (அந்த நாட்டைப் பிடிக்கும். இதற்கு முன்பு சென்றுள்ளேன். ஆனால் இந்த முறை அல்ல) ரோஹித் கேப்டனாக நியமிக்கப்படுகிறார் என்கிற தகவலைச் சொன்னது மட்டும்தான் தெரியும். திங்கள் அன்று கிடைத்த தகவலுக்குப் பிறகும்  சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎப்) வீரர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து, இஸ்லாமாபாதில் இருந்து போட்டியை நடுநிலையான வேறிடத்துக்கு மாற்றிய பிறகும் அகில இந்திய டென்னிஸ் சங்கம் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. நான் விளையாடத் தயாராக உள்ளேன். வேறு தகவலைக் கேட்கும்வரை நான் தான் கேப்டன் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com