டி20 போட்டியின் இறுதிச்சுற்றில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இரு கர்நாடக வீரர்கள் கைது!

இந்த வருட கர்நாடக பிரீமியர் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் கர்நாடக வீரர்கள்...
கெளதம் (படம்: @KPLKSCA/Twitter)
கெளதம் (படம்: @KPLKSCA/Twitter)

இந்த வருட கர்நாடக பிரீமியர் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் கர்நாடக வீரர்கள் சிஎம் கெளதம், அப்ரார் கஸி ஆகிய இரு வீரர்களும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் சிஎம் கெளதமும் அதே அணியைச் சேர்ந்த கஸியும் இறுதிப் போட்டியில் நிதானமாக விளையாடுவதற்காக தலா ரூ. 20 லட்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் போட்டியில் டஸ்கர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. மேலும் பெங்களூரு பிளாஸ்டர் அணிக்கு எதிராக ஃபிக்ஸிங்கில் இருவரும் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது இருவரும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முன்னாள் கர்நாடக வீரர்களான இருவரும் தற்போது அணி மாறியுள்ளார்கள். கெளதம் கோவா அணிக்கும் கஸி மிஸோரம் அணிக்கும் விளையாடி வருகிறார்கள்.

ஐபிஎல் போட்டியில் நான்கு வருடங்கள் ஆர்சிபி அணிக்காக விளையாடிய கெளதம், பிறகு 2013-ல் தில்லி அணிக்குத் தேர்வானார். பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தேர்வானார். இதுவரை 13 ஐபிஎல் ஆட்டங்களில் அவர் விளையாடியுள்ளார். நாளை தொடங்கவுள்ள சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் அவரவர் மாநில அணியில் கெளதம், கஸி ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளார்கள். 

சமீபத்தில் மற்றொரு கேபில் வீரரான நிஷாந்த் சிங், சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சிஎம் கெளதம், அப்ரார் கஸி ஆகிய இரு வீரர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com