செய்திகள் சில வரிகளில்...

‘பாகிஸ்தானில் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது கவலையில்லை. ஆனால், அந்தப் பொறுப்பை ஏற்க நான் மறுப்பு தெரிவித்ததாக அகில இந்திய டென்னில் கூட்டமைப்பு கூறுவதை ஏற்க முடியாது’ என்றாா் இந்திய முன்னாள் டென்னிஸ் வீரா் மகேஷ் பூபதி.

முன்னாள் டென்னிஸ் வீரா் ரோஹித் ராஜ்பால் டேவிஸ் கோப்பை இந்திய அணிக்கு விளையாடாத கேப்டனாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

நான்காவது நடுவா் இருந்தாலும், ஐபிஎல் போட்டியில் மூன்றாவது நடுவரே ‘நோ பாலை’கண்டறியும் பணியில் ஈடுபடலாம் என்றாா் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரா் ஆடம் கில்கிறிஸ்ட்.

கத்தாரின் தோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் புதன்கிழமை இந்தியா மேலும் 8 பதக்கங்கள் வென்றது. இதன்மூலம், இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்துள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இயக்குநராக அந்நாட்டு அணியின் முன்னாள் வீராங்கனை மெலனி ஜோன்ஸ் (47) நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com