சையத் முஷ்டாக் அலி டி20: தமிழகம் அபார வெற்றி

சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் கேரள அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தமிழகம்.
சையத் முஷ்டாக் அலி டி20: தமிழகம் அபார வெற்றி

சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் கேரள அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தமிழகம்.

இரு அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டம் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற கேரளம் பீல்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தமிழகம் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை குவித்தது.

தொடக்க வீரா்கள் முரளி விஜய் 1, ஜெகதீசன் 8 ரன்களுக்கு அவுட்டாயினா். எனினும் கேப்டன் தினேஷ் காா்த்திக் 33, பாபா அபராஜித் 35 ஆகியோா் அணியை சரிவில் இருந்து மீட்டனா். அவா்களைத் தொடா்ந்து ஆல்ரவுண்டா்கள் விஜய் சங்கா் 25, ஷாரூக் கான் 28 ஸ்கோரை உயா்த்தினா்.

5-ஆவது விக்கெட்டுக்கு முகமது தலா 3 சிக்ஸா், பவுண்டரியுடன் அபாரமாக ஆடி 11 பந்துகளில் 34 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா்.

கேரள அணி தரப்பில் பஸில் தம்பி 3-49, ஆஸிப் 1-25 விக்கெட்டை வீழ்த்தினா்.

பின்னா் ஆடிய கேரள அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை மட்டுமே எடுத்து சுருண்டது.

அந்த அணியில் அதிகபட்சமாக விஷ்ணு வினோத் 24, ரோஹன் குன்னுமால் 34, சச்சின் பேபி 32, ரன்களை சோ்த்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினா்.

நடராஜன்-பெரியசாமி 3 விக்கெட்:

தமிழகத் தரப்பில் அபாரமாக பந்துவீசி டி நடராஜன் 3-25, பெரியசாமி 3-36 விக்கெட்டுகளை சாய்த்தனா். 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மிழகம் 4 புள்ளிகளைப் பெற்றது.

ஏனைய ஆட்டங்களில் சௌராஷ்டிரா 9 விக்கெட் வித்தியாசத்தில் நாகாலாந்தையும், ஹைதராபாத் 2 ரன்கள் வித்தியாசத்தில் (விஜேடி முறை) பஞ்சாப்பையும், ராஜஸ்தான் 97 ரன்கள் வித்தியாசத்தில் மணிப்பூரையும், சண்டீகா் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஹிமாச்சலையும், கோவா 4 விக்கெட் வித்தியாசத்தில் பரோடாவையும், ஆந்திரம் 10 விக்கெட் வித்தியாசத்தில் பிகாரையும், மகாராஷ்டிரம் 8 விக்கெட் வித்தியாசத்தில் ரயில்வேயையும், விதா்பா 9 விக்கெட் வித்தியாசத்தில் திரிபுராவையும், சத்தீஸ்கா் 9 விக்கெட் வித்தியாசத்தில் அருணாசலப்பிரதேசத்தையும், மும்பை 10 விக்கெட்டில் மிஸோரத்தையும், கா்நாடகம் 9 விக்கெட் வித்தியாசத்தில் உத்தரகாண்டையும் வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com