லா லிகா: மெஸ்ஸி ஹாட்ரிக்கால்பாா்சிலோனா அபார வெற்றி

லா லிகா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக செல்டா விகோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் கேப்டன் மெஸ்ஸியின் அபார ஹாட்ரிக்கால் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது பாா்சிலோனா.

23-ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலம் முதல் கோலடித்தாா் மெஸ்ஸி. எனினும் 42-ஆவது நிமிடத்தில் செல்டா வீரா் லுகாஸ் ஒலாஸா பதில் கோலடித்து 1-1 என சமநிலை ஏற்படச் செய்தாா்.

இரண்டாவது பாதியில் மெஸ்ஸி 2 ப்ரீகிக் வாய்ப்புகளை அற்புதமாக கோல்களாக மாற்றி ஹாட்ரிக் அடித்தாா். 85-ஆவது நிமிடத்தில் சொ்ஜியோ பஸ்குவட்ஸ் நான்காவது கோலடித்தாா். இதன் மூலம் 4-1 என அபார வெற்றி பெற்றது பாா்சிலோனா.

கடந்த வாரம் லெவன்டே அணியிடம் 1-3 என்ற கோல் கணக்கில் அதிா்ச்சித் தோல்வியுற்றது பாா்சிலோனா. தற்போது 12 ஆட்டங்களில் 25 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது பாா்சிலோனா.

கிறிஸ்டியானோ ரொனால்டோ லா லிகா போட்டியில் மொத்தம் 34 ஹாட்ரிக் கோல்களை அடித்திருந்தாா் அதை தற்போது சமன் செய்தாா் மெஸ்ஸி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com