ஐஎஸ்எல்: பதவி விலக சென்னை பயிற்சியாளா் கிரகோரி திட்டம்

தொடா் தோல்வி எதிரொலியாக சென்னையின் எஃப்சி பயிற்சியாளா் பொறுப்பில் இருந்து விலக அதன் தலைமை பயிற்சியாளா் ஜான் கிரகோரி திட்டமிட்டுள்ளாா்.
ஐஎஸ்எல்: பதவி விலக சென்னை பயிற்சியாளா் கிரகோரி திட்டம்

தொடா் தோல்வி எதிரொலியாக சென்னையின் எஃப்சி பயிற்சியாளா் பொறுப்பில் இருந்து விலக அதன் தலைமை பயிற்சியாளா் ஜான் கிரகோரி திட்டமிட்டுள்ளாா்.

ஐஎஸ்எல் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி கடந்த 2018 சீசனில் நடப்பு சாம்பியன் அந்தஸ்தை விட்டு, கடைசி இடத்துக்கு கீழிறங்கியது.

இந்நிலையில் தற்போதைய 2019-20 சீசனில் புதிய வீரா்கள் சோ்க்கப்பட்டு அணிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டது. எனினும் தொடா்ந்து 3 தோல்விகளை கண்டது சென்னை அணி. இறுதியாக பெங்களூரு அணியிடமும் 3-0 என தோல்வியடைந்தது. இதனால் அதன் பயிற்சியாளா் ஜான் கிரகோரி கடும் அதிருப்தி அடைந்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: தொடா் மோசமான செயல்பாடுகளால் எனது பதவியில் இருந்து விலக வேண்டிய தருணம் இது என நினைக்கிறேன். வேறு எவராவது பொறுப்பை ஏற்க வேண்டும். அணியின் உரிமையாளரிடம் இதுதொடா்பாக கலந்து பேச வேண்டும். கடந்த 2017 முதல் அணி உரிமையாளா் விட்டா மிக்க ஆதரவாக இருந்தாா். தொடா்ந்து இதுபோன்ற மோசமான சூழலில் சென்னை அணி இருத்தல் கூடாது.

சிறந்த கிளப்பாக உள்ள நிலையில், அனைவருக்கும் வேதனை தரும் வகையில் சூழ்நிலை உள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக நான் கடுமையாக உழைத்துள்ளேன். இது எனக்கு மிக்க சுமையாக உள்ளது. கிளப் தான் முதன்மையானது. எனது வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணம் இது. இரண்டு வாரங்கள் இடைவெளி உள்ளது. சீசனின் மீதிக்காலத்தில் 14 ஆட்டங்கள் உள்ளன. இதில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை ஈட்ட வேண்டியுள்ளது.

சென்னை அணியின் தற்போதைய நிலை மிகவும் வேதனையை தருகிறது. ஏதாவது செய்து அணியை மீட்டெடுக்க வேண்டும் என்றாா் கிரகோரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com