இரட்டைச் சத நாயகன் மயங்க் அகர்வால் நிகழ்த்தியுள்ள சாதனைகள்!

இந்த இரட்டைச் சதத்தின் மூலம் மயங்க் அகர்வால் நிகழ்த்தியுள்ள சாதனைகள்...
இரட்டைச் சத நாயகன் மயங்க் அகர்வால் நிகழ்த்தியுள்ள சாதனைகள்!

இந்தூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டைச் சதமெடுத்துள்ளார் மயங்க் அகர்வால். இது அவருடைய 2-வது இரட்டைச் சதம். 8 டெஸ்டுகளில் 12 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டியுள்ளார். 

ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 டெஸ்டுகளிலும் 76, 42, 77 என அதிக ரன்கள் குவித்து ஆச்சர்யப்படுத்தினார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரு டெஸ்டுகளில் ஒரு அரை சதம் மட்டும் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டெஸ்டுகளில் மீண்டும் ரன்கள் குவிக்க ஆரம்பித்தார். முதல் டெஸ்டில் இரட்டைச் சதமும் 2-வது டெஸ்டில் சதமும் அடித்து இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். இப்போது வங்கதேசத்துக்கு எதிராக மற்றுமொரு இரட்டைச் சதம் அடித்துள்ளார்.

இந்த இரட்டைச் சதத்தின் மூலம் மயங்க் அகர்வால் நிகழ்த்தியுள்ள சாதனைகள்:

குறைவான இன்னிங்ஸ்களில் 2-வது இரட்டைச் சதமெடுத்த வீரர்கள்

5 இன்னிங்ஸ் - வினோத் காம்ப்ளி
12 இன்னிங்ஸ் - மயங்க் அகர்வால்
13 இன்னிங்ஸ் - டான் பிராட்மேன்
15 இன்னிங்ஸ் - கிரீம் ஸ்மித் 

குறைவான இன்னிங்ஸ்களில் 3 டெஸ்ட் சதங்களை எடுத்த தொடக்க வீரர்கள்

4 இன்னிங்ஸ் - ரோஹித் சர்மா
7 இன்னிங்ஸ் - சுனில் கவாஸ்கர்
9 இன்னிங்ஸ் - கே.எல். ராகுல்
12 இன்னிங்ஸ் - விஜய் மெர்சண்ட்/மயங்க் அகர்வால்

கடந்த நான்கு டெஸ்டுகளிலும் இரட்டைச் சதமெடுத்த இந்திய வீரர்கள்

முதல் டெஸ்ட் vs தெ.ஆ: மயங்க் அகர்வால் - 215 ரன்கள்
2-வது டெஸ்ட் vs தெ.ஆ.: கோலி - 254* ரன்கள்
3-வது டெஸ்ட் vs தெ.ஆ: ரோஹித் சர்மா - 212 ரன்கள்
முதல் டெஸ்ட் vs வங்கதேசம்: மயங்க் அகர்வால் - 243 ரன்கள்

* இரட்டைச் சதத்தை சிக்ஸர் மூலமாக எடுத்த 2-வது இந்திய வீரர் - மயங்க் அகர்வால். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் சிக்ஸர் மூலமாக இரட்டைச் சதமெடுத்தார் ரோஹித் சர்மா.  

ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள்

 8 சிக்ஸர்கள் - சிந்து
8 சிக்ஸர்கள் - மயங்க் அகர்வால்

மயங்க் அகர்வால் டெஸ்ட் ரன்கள்

76
77
5
55
215
108
10
243

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com