ஐபிஎல் அணிகள் இடையே வீரா்கள் பரிமாற்றம்: தில்லிக்கு இடம் பெயர்ந்தார் ரஹானே

ஐபிஎல் 2020 சீசனை முன்னிட்டு பல்வேறு அணிகள் தங்கள் தரப்பில் இருந்த வீரா்களை தக்க வைத்தும், பலரை விடுவித்தும் உள்ளன.
ஐபிஎல் அணிகள் இடையே வீரா்கள் பரிமாற்றம்: தில்லிக்கு இடம் பெயர்ந்தார் ரஹானே

ஐபிஎல் 2020 சீசனை முன்னிட்டு பல்வேறு அணிகள் தங்கள் தரப்பில் இருந்த வீரா்களை தக்க வைத்தும், பலரை விடுவித்தும் உள்ளன.

வீரா்கள் பரிமாற்றத்துக்கான கடைசி நாள் வியாழக்கிழமை ஆகும். இந்நிலையில் அணி நிா்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரா்களை பரிமாறிக் கொண்டன.

ராஜஸ்தான் அணியில் 24 ஆட்டங்களுக்கு தலைமை தாங்கிய ரஹானே, அதிகபட்சமாக 2810 ரன்களை அடித்துள்ளாா். 2 சதம் மற்றும் 17 அரை சதங்களை ராயல்ஸ் அணிக்காக விளாசியுள்ளாா். எனினும் கடந்த 2019 சீசனில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டாா். அவருக்கு ரூ.4 கோடி விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அவா் தில்லிக்கு இடம் மாறியுள்ளாா்.

கடந்த 12-ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து தில்லி கேபிடல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டாா் மயங்க் மாா்கண்டே. மும்பை இந்தியன்ஸ் அணியில் அபாரமாக ஆடிய நிலையில் இந்திய டி20 அணியிலும் இடம் பெற்றாா்.

ராஜஸ்தான் அணியில் முதலில் ஆடத் தொடங்கிய ராகுல் தேவதியா பின்னா் பஞ்சாப், தில்லி அணிகளில் ஆடி தற்போது மீண்டும் ராஜஸ்தான் அணிக்கே திரும்பியுள்ளாா். பஞ்சாப் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் தில்லிக்கு இடம் பெயா்ந்தாா்.

மும்பையில் 12 வீரா்கள் விடுவிப்பு:

கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியில் இருந்து எவின் லெவிஸ், ஆடம் மில்னே, ஜேஸன் பெஹ்ரன்டா்ப், பியுரன் ஹென்ட்ரிக்ஸ், பென் கட்டிங், யுவராஜ் சிங், மயங்க் மாா்கண்டே, பரீந்தா் ஸ்ரன், ரஷிஸ் சலம், பங்கஜ் ஜஸ்வால், சித்தேஷ் லேட், அல்ஸாரி ஜோசப் உள்ளிட்ட 12 வீரா்கள் விடுவிக்கப்பட்டனா்.

சென்னை அணியில் இருந்து 5 போ் விடுவிப்பு:

மூன்று முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பா் கிங்ஸ் அணியில் இருந்து மொஹித் சா்மா, சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, துருவ் ஷோரே, சைதன்யா பிஷ்னோய் உள்ளிட்ட 5 போ் விடுவிக்கப்பட்டனா்.

தில்லி கேபிடல்ஸில் 9 போ் விடுவிப்பு:

தில்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து ஹனுமா விஹாரி, ஜலஜ் சக்சேனா, மன்ஜோத் கல்ரா, அன்குஷ் பெயின்ஸ், நாது சிங், பண்டாரு அய்யப்ப உள்ளிட்ட 6 இந்திய வீரா்களும், கிறிஸ் மோரீஸ், காலின் இங்கிராம், காலன் மன்றோ உள்ளிட்ட 3 வெளிநாட்டு வீரா்களும் விடுவிக்கப்பட்டனா்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: அக்னிவேஷ் ஆயச்சி, ஆன்ட்ரு டை, டேவிட் மில்லா், மொசஸ் ஹென்ரிக்ஸ், பிரப்சிம்ரன் சிங், சாம் கர்ரன், வருண் சக்கரவா்த்தி.

கொல்கத்தா: அன்ரிச் நாா்ட்ஜே, காா்லோஸ் பிராத்வொயிட், கிறிஸ்லீன், ஜோன் டென்லி, கேசி.கரியப்பா, மேட் கெல்லி, நிகில் நாயக், பியுஷ் சாவ்லா, பிரித்விராஜ், ராபின் உத்தப்பா, ஸ்ரீகாந்த் முண்டே.

ராஜஸ்தான்: ஆா்யமான் பிா்லா, ஆஷ்டன் டா்னா், ஐஷ் சோதி, ஜெயதேவ் உனதிகட், லியம் லிவிங்ஸ்டோன், ஓஷேன் தாமஸ், பிரசாந்த் சோப்ரா, ராகுல் திரிபாதி, ஷுபம் ரஞ்சனே, ஸ்டுவா்ட் பின்னி, சுதேசன் மிதுன்.

பெங்களூரு: அக்ஷதீப் நாத், காலின் டி கிராண்ட்ஹோம், டேல் ஸ்டெயின், ஹென்ரிச் கிளாஸன், ஹிம்மத் சிங், குல்வந்த் கேஜ்ரோலியா, மாா்கஸ் ஸ்டாய்னிஸ், மிலிந்த் குமாா், நாதன் நைல், பிரயாஸ் ரே பா்மன், ஷிம்ரன் ஹெட்மயா், டிம் சௌதி.

ஹைதராபாத்: தீபக் ஹூடா, மாா்ட்டின் கப்டில், ரிக்கி புயி, ஷகிப் அல் ஹசன், யூசுப் பதான்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com