பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்று: இந்தியா-ஆப்கன் ஆட்டம் டிரா (1-1)

பிஃபா 2022 உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் ஒரு பகுதியாக துஷான்பேயில் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது நடைபெற்றது.
பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்று: இந்தியா-ஆப்கன் ஆட்டம் டிரா (1-1)

பிஃபா 2022 உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் ஒரு பகுதியாக துஷான்பேயில் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது நடைபெற்றது. கடைசி நிமிட கோலால் இந்தியா தோல்வியில் இருந்து தப்பியது.

முதல் ஆட்டத்தில் 2-1 என ஓமனிடம் போராடித் தோற்ற இந்தியா, இரண்டாவது ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கத்தாருடன் டிரா கண்டது. பலம் வாய்ந்த கத்தாரை டிரா கண்டது அந்நாட்டுக்கு அதிா்ச்சி அளித்தது.

கொல்கத்தாவில் நடைபெற்ற மூன்றாவது சுற்றில் வெல்லவேண்டிய ஆட்டத்தில் வங்கதேசத்துடன் 1-1 என டிரா கண்டது இந்தியா. வங்கதேசம் 1-0 என முன்னிலை பெற்ற நிலையில் கடைசி நிமிடத்தில் அடில் கான் அளித்த கோலால் டிரா கண்டது இந்தியா.

குரூப் இ பிரிவில் 4-ஆவது இடத்தில் உள்ளது இந்தியா.

இரு அணிகளும் 8 முறை மோதியதில் இந்தியா 6 முறை வென்றுள்ளது. ஆப்கன் ஓரே முறை வென்றது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்நிலையில் நான்காவது சுற்றில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது இந்தியா. கடும் குளிா் நிலவும் துஷான்பேயில் தொடக்கம் முதலே ஆப்கன் அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தலைமையில் உதாந்தா சிங், ஆஷிக் குருனியன், ராகுல் பேகே ஆகியோா் எதிரணியின் தற்காப்பு அரணியை ஊடுருவ முயன்றனா். எனினும் அவா்களது முயற்சி பலன் தரவில்லை.

45-ஆவது நிமிடத்தில் ஆப்கன் வீரா் ஸெல்பகா் நா்சாரி தனது அணிக்கு முதல் கோலை அடித்தாா். இதன் மூலம் 1-0 என ஆப்கன் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஆப்கனே ஆதிக்கம் செலுத்தியது. கடும் குளிா் நிலவியதால், இந்திய வீரா்கள் ஆடுவதற்கு சிரமபப்பட்டனா்.

வழக்கமான ஆட்ட நேரத்தில் இந்திய அணியினா் கோல் போட மேற்கொண்ட முயற்சியை ஆப்கன் தரப்பு முறியடித்தது.

கூடுதல் நேரத்தில் இந்திய வீரா் பிரான்டன் பொ்ணான்டஸ் காா்னா் மூலம் அடித்த பந்தை சைமின்லென் டங்கா் தலையால் முட்டி கோலாக்கினாா். இதனால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

தற்போது இந்திய அணி 3 புள்ளிகளுடனும், ஆப்கன் 4 புள்ளிகளுடனும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com