உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் சதம் அடிக்காததற்கு தோனிதான் காரணமா? மௌனம் கலைத்தார் கம்பீர்!

2011 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தான் சதம் அடிக்காததற்கு தோனியே காரணம் என கௌதம் கம்பீர் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


2011 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தான் சதம் அடிக்காததற்கு தோனியே காரணம் என கௌதம் கம்பீர் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

2011 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் கௌதம் கம்பீர் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்மூலம், அவர் வெறும் 3 ரன்களில் தனது சதத்தை தவறவிட்டார். அவர் சதம் அடிக்காதபோதிலும், அந்த சமயத்தில் அவருடைய பேட்டிங் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில், உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் சதம் அடிக்காதது குறித்து ஒரு நேர்காணலில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கௌதம் கம்பீர், 

"இந்த கேள்வி என்னிடம் பலமுறை கேட்கப்பட்டுள்ளது. நான் அனைத்து இளம் வீரர்களுக்கும், அனைவருக்கும் இதை தெரிவித்துக்கொள்கிறேன். 97 ரன்கள் எடுக்கும் வரை நான் எனது தனிப்பட்ட ரன்களைக் குறித்து சிந்திக்கவில்லை. இலங்கை அணி நிர்ணயித்திருந்த இலக்கை குறித்து மட்டுமே சிந்தித்திருந்தேன்.

எனக்கு நினைவு இருக்கிறது. ஒரு ஓவர் நிறைவடைந்தவுடன் நானும், தோனியும் களத்தில் இருந்தோம். அவர் என்னிடம், 'இன்னும் 3 ரன்கள் மீதமுள்ளது. அதை எடுத்துவிட்டால், உன்னுடைய சதம் பூர்த்தியாகிவிடும்' என்றார்.

உடனடியாக எனது சிந்தனை எனது தனிப்பட்ட செயல்பாடு, தனிப்பட்ட ரன் உள்ளிட்டவை மீது சென்றது. இதுபோன்ற மனநிலை ஏற்பட்டால் நாம் எதிர்பாராதவிதமாக தவறு ஏதேனும் செய்துவிடுவோம். அந்த தருணத்தின் முன்பு வரை இலங்கை அணி நிர்ணயித்திருந்த வெற்றி இலக்கே என்னுடைய இலக்காக இருந்தது. அதுமட்டுமே எனது மனதில் இருந்திருந்தால், எனது சதத்தை நான் எளிதாக பூர்த்தி செய்திருக்கலாம்.

97 ரன்கள் எடுக்கும் வரை நான் நிகழ்காலத்திலேயே இருந்தேன். ஆனால், சதம் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால் எதிர்பாராத தவறைச் செய்ய நேரிட்டது. அதனால், அந்த கவனம் சிதறாமல் இருப்பது மிக முக்கியம்.

நான் ஆட்டமிழந்த பிறகு ஓய்வறையை நோக்கி செல்லும்போது, இந்த 3 ரன்கள் வாழ்நாள் முழுவதும் என்னை பாதிப்புக்குள்ளாகும் என எனக்கு நானே தெரிவித்துக்கொண்டேன். அது உண்மைதான். இன்றைக்கும், அந்த 3 ரன்களை ஏன் எடுக்கவில்லை என என்னிடம் கேட்கின்றனர்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com