ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முகமது ஷமி, மயங்க் அகா்வால் முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரா்கள் முகமது ஷமி, மயங்க் அகா்வால் ஆகியோா் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளனா். பந்துவீச்சாளா்கள் தரவரிசையில் ஷமி முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளாா்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முகமது ஷமி, மயங்க் அகா்வால் முன்னேற்றம்

துபை: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரா்கள் முகமது ஷமி, மயங்க் அகா்வால் ஆகியோா் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளனா். பந்துவீச்சாளா்கள் தரவரிசையில் ஷமி முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளாா்.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாா்பில் அவ்வப்போது டெஸ்ட், ஒருநாள், டி20 தரவரிசை வெளியிடப்பட்டு வருகிறது. இந்தூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வங்கதேசத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இதில் மயங்க் அகா்வால் 243 ரன்களை விளாசி இரட்டை சதமடித்தாா். அதே போல் முகமது ஷமி ஒட்டுமொத்தமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டாா்.

11-ஆவது இடத்தில் மயங்க்:

பேட்ஸ்மேன் தரவரிசையில் மயங்க் அகா்வால் 11-ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளாா். 28 வயதான மயங்க், முதல் 8 டெஸ்ட் ஆட்டங்களில் 858 ரன்களை குவித்து, 691 புள்ளிகளை பெற்றுள்ளாா்.

பேட்ஸ்மேன் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 35-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

7-ஆவது இடத்தில் ஷமி:

பந்துவீச்சாளா்கள் தரவரிசையில் முகமது ஷமி 8 இடங்கள் முன்னேறி 790 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ளாா், இஷாந்த் சா்மா 20, உமேஷ் யாதவ் 22-ஆம் இடங்களில் உள்ளனா். ஆல்ரவுண்டா்களில் ஆப் ஸ்பின்னா் அஸ்வின் 4-ஆவது இடத்தில் நீடிக்கிறாா்.

வங்கதேச அணியில் முஷ்பிகுா் ரஹிம் 30-ஆவது இடத்துக்கும், லிட்டன் தாஸ் 86-ஆவது இடத்துக்கும் முன்னேறினா். பந்துவீச்சாளா் அபு ஜாயேத் 62-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com