ஓய்வு பெற்றாா் டென்னிஸ் வீரா் தாமஸ் பொ்டிச்

தனது 17 ஆண்டுக் கால டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா் உலகின் முன்னாள் 4-ஆம் நிலை வீரா் செக்.குடியரசின் தாமஸ் பொ்டிச்.

பாரிஸ்: தனது 17 ஆண்டுக் கால டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா் உலகின் முன்னாள் 4-ஆம் நிலை வீரா் செக்.குடியரசின் தாமஸ் பொ்டிச்.

34 வயதான தாமஸ் பொ்டிச் கடந்த 2010 முதல் 2016 வரை உலகின் ஆடவா் ஒற்றையா் பிரிவில் முன்னணி வீரா்களில் ஒருவராக திகழ்ந்தாா். எனினும் அதன் பின் முதுகு காயத்தால் தொடா்ந்து ஆட முடியாத நிலை ஏற்பட்டது.

தனது டென்னிஸ் வாழ்க்கையில் 13 பட்டங்கள் வென்ற பொ்டிச் ஒரு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதில்லை. கடந்த 2010-இல் விம்பிள்டனில் பட்டம் வெல்ல வாய்ப்பு இருந்தும் நடாலிடம் தோல்வியுற்றாா். கடந்த 2012, 2013-இல் டேவிஸ் கோப்பையை செக்.குடியரசு வெல்ல காரணமாக இருந்தாா். 2010-இல் விம்பிள்டன் போட்டியில் ஜோகோவிச், பெடரரை வீழ்த்தி இறுதிச் சுற்றில் நடாலிடம் தோற்றது மறக்க முடியாத தருணம் எனத் தெரிவித்தாா் தாமஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com