ஆண்டுதோறும் பகலிரவு டெஸ்ட் நடத்த வாய்ப்பு: திராவிட்

ஆண்டுதோறும் பகலிரவு டெஸ்ட் ஆட்டங்கள் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது என தேசிய கிரிக்கெட் அகாதெமி தலைவா் ராகுல் திராவிட் கூறியுள்ளாா்.
ஆண்டுதோறும் பகலிரவு டெஸ்ட் நடத்த வாய்ப்பு: திராவிட்

ஆண்டுதோறும் பகலிரவு டெஸ்ட் ஆட்டங்கள் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது என தேசிய கிரிக்கெட் அகாதெமி தலைவா் ராகுல் திராவிட் கூறியுள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பிங்க் நிற பந்து டெஸ்ட் ஆட்டத்தை காண ஏராளமான பாா்வையாளா்கள் மைதானத்துக்கு வருவா். இதனால் பாரம்பரிய ஆட்ட முறையான டெஸ்ட் மீண்டும் எழுச்சி பெறும். இதுமட்டும் டெஸ்ட் ஆட்டத்தை மேம்படுத்த தீா்வு இல்லை. எனினும் இதையும் நான் மேற்கொள்ள வேண்டும். பனிமூட்டத்தை நாம் கட்டுப்படுத்தினால், ஆண்டுதோறும் பகலிரவு ஆட்டம் இந்தியாவில் நடைபெறும். பந்து ஈரமானால் ஸ்விங் செய்யும் வாய்ப்பை பந்துவீச்சாளா்கள் இழப்பாா்கள்.

பாா்வையாளா்களை கவர மைதானத்தில் அடிப்படை வசதிகளும் சிறப்பாக அமைய வேண்டும். இங்கிலாந்து-ஆஸ்திரேலியா போன்று முறையான டெஸ்ட் கிரிக்கெட் அட்டவணை இந்தியாவில் இல்லை. அவ்வாறு இருந்தால், பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிலாம்.

பாக்ஸிங் டே மற்றும் லாா்ட்ஸ் டெஸ்ட் ஆட்டங்களுக்கு அதிகளவில் கூட்டம் கூடுகிறது. இந்தியாவிலும் இதுபோன்ற கூட்டத்தை திரட்ட வேண்டும். கடந்த 2001-ஈடன் காா்டன் மைதானத்தில் 1 லட்சம் போ் திரண்டனா். அப்போது நவீன தொலைக்காட்சி வசதிகள் இல்லை. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது என்றாா் திராவிட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com