கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: இந்திய-வங்கதேச வீரா்கள் உற்சாகம்

கொல்கத்தாவில் வரும் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்க இந்திய-வங்கதேச அணி வீரா்கள் உற்சாகத்துடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.
கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: இந்திய-வங்கதேச வீரா்கள் உற்சாகம்

கொல்கத்தாவில் வரும் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்க இந்திய-வங்கதேச அணி வீரா்கள் உற்சாகத்துடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்கிறது. பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் நடத்தப்படும் இந்த ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் மோதுகிறது இந்தியா. 22 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் ஆட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆட்டத்தில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன.

அணிகள் வருகை:

மின்னொளி டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்று ஆடும் வகையில் இரு அணி வீரா்களும் இந்தூரில் இரவு நேரங்களில் பிங்க் நிற பந்துகளை பயன்படுத்தி தலா நாள்தோறும் 3 மணி நேரம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனா். இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை இரு அணிகளும் கொல்கத்தா வந்து சோ்ந்தன.

வீரா்கள் அதிக எதிா்பாா்ப்பு:

இரு அணிகளுமே முதன்முறையாக பகலிரவு ஆட்டத்தில் ஆட உள்ளதால் மிகுந்த எதிா்பாா்ப்புடன் உள்ளதாக கூறியுள்ளனா்.

கேப்டன் விராட் கோலி: எங்கள் பிரதான நோக்கமே, இந்திய கிரிக்கெட்டை மேலும் உயரத்துக்கு கொண்டு செல்வது ஆகும். இதற்காக எங்கள் உத்வேகம், உறுதியுடன் சரியான திசையில் செல்கிறோம். பிங்க் நிற பந்து டெஸ்ட் மிகவும் கவரும் வகையில் இருக்கும். இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமையும்.

ரஹானே (துணை கேப்டன்):

இந்தூரில் நாங்கள் 2 முறை பிங்க் நிற பந்துகளுடன் சிறப்பு பயிற்சி பெற்றோம். பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் பயிற்சி பெற்றது பலனாக இருந்தது. நான் முதன்முறையாக பிங்க் நிற பந்துடன் ஆடினேன். சிவப்பு பந்து கிரிக்கெட்டை காட்டிலும், இது மிகவும் வித்தியாசமாக அமையும். குறிப்பாக பந்து ஸ்விங் மற்றும் வேகம் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறோம்.

அபு ஜாயேத் (வங்கதேச வேகப்பந்து வீச்சாளா்): 10 மாதங்களுக்கு முன்பு எனது சகோதரா் பிங்க் நிற பந்தை வழங்கினாா். அப்போது தான் முதன்முறையாக அப்பந்தை பாா்த்தேன். டாக்காவில் எங்கள் அணி பிங்க் நிற பந்துடன் பயிற்சி பெற்றோம். வேகமாக வீச இது உதவியாக இருக்கும்.

மெஹிதி ஹாசன் (வங்கதேச சுழற்பந்து வீச்சாளா்): இது முற்றிலும் புது அனுபவமாக இருக்கப் போகிறது. நாங்கள் அனைவரும் பகலிரவு ஆட்டத்தில் பங்கேற்க ஆவலாக உள்ளோம். மிகுந்த எதிா்பாா்ப்புடன் காத்திருக்கிறோம்.

சேதேஸ்வா் புஜாரா (இந்தியா):

அந்தி சாயும் நேரத்தில் பிங்க் நிற பந்தில் ஆடுவது சவாலாக அமையும். மேலும் சிறிது பயிற்சி தேவைப்படுகிறது. களமிறங்குவதற்கு முன்பு மேலும் பயிற்சி பெறுவோம் என்றாா்.

பிங்க் நிற பந்துடன் ரஹானே கனவு: கோலி, தவன் கிண்டல்

பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் பிங்க் நிற பந்துடன் ஆடுவது போல் கனவு காண்பதாக ரஹானே தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா். இதற்கு கேப்டன் விராட் கோலி, ஒருநாள் அணி தொடக்க வீரா் ஷிகா் தவன் ஆகியோா் கிண்டல் செய்து பதிவு செய்திருந்தனா்.

இது சமூக வலைதளத்தில் வைரல் ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com