பிசிசிஐயின் புதிய தேர்வுக்குழுத் தலைவராகிறாரா லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன்?

உள்ளூர் போட்டிகளைத் தொலைக்காட்சிகளில் வர்ணனை செய்வதால் இந்தியாவில் உள்ள திறமைகளை லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் நன்கு அறிவார் என்பது... 
பிசிசிஐயின் புதிய தேர்வுக்குழுத் தலைவராகிறாரா லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன்?

இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்கிறது. இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கடைசியாகத் தேர்வு செய்த அணிகள் இவை. இத்துடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. நியூஸிலாந்து தொடருக்கான இந்திய அணியைப் புதியத் தேர்வுக்குழுத் தலைவர் தேர்வு செய்யவுள்ளார்.

டிசம்பர் 1 அன்று பிசிசிஐயின் வருடாந்திரக் கூட்டம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் புதிய தேர்வுக்குழுத் தலைவரை அறிவிக்கவுள்ளது பிசிசிஐ. பிரசாத்துக்கு அடுத்ததாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன், புதிய தேர்வுக்குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்படவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உள்ளூர் போட்டிகளைத் தொலைக்காட்சிகளில் வர்ணனை செய்வதால் இந்தியாவில் உள்ள திறமைகளை லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் நன்கு அறிவார் என்பது அவருடைய தேர்வுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இந்தப் பதவிக்கு வருடத்துக்கு ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வழங்கப்படும் எனத் தெரிகிறது. தற்போதைய தேர்வுக்குழுவில் உள்ள கியாநேந்திரா, ஜதின், தேவங் காந்தி, சரண்தீப் சிங் ஆகியோர் லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் தலைமையில் மீண்டும் தங்கள் பணிகளைத் தொடர்வார்கள் என்றும் அறியப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com