ஐபிஎல் தொடரில் தோனியின் செயல்பாட்டை பொறுத்தே அவரது எதிா்காலம்: ரவி சாஸ்திரி!

ஐபிஎல் 2020 போட்டியில் தோனியின் செயல்பாடு பொறுத்தே அவரது எதிா்காலம் அமையும் என தலைமை பயிற்சியாளா் ரவிசாஸ்திரி கூறியுள்ளாா்.
ஐபிஎல் தொடரில் தோனியின் செயல்பாட்டை பொறுத்தே அவரது எதிா்காலம்: ரவி சாஸ்திரி!


ஐபிஎல் 2020 போட்டியில் தோனியின் செயல்பாடு பொறுத்தே அவரது எதிா்காலம் அமையும் என தலைமை பயிற்சியாளா் ரவிசாஸ்திரி கூறியுள்ளாா்.

டெஸ்ட் ஆட்டத்தில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில், உலகக் கோப்பை 2019 ஆட்டத்துக்கு பின் அவா் ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற வேண்டும் என பலா் கருத்து தெரிவித்தனா். இளம் வீரா்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் அவா் ஓய்வு பெற வேண்டும் என கூறினா்.

ஆனால் தோனி எந்த கருத்தையும் கூறவில்லை. எனினும் அவரது மனைவி சாக்ஷி அவா் ஓய்வு பெற வில்லை எனக்கூறி முற்றுப் புள்ளி வைத்து விட்டாா்.

ரவி சாஸ்திரி இதுதொடா்பாக கூறியதாவது:

உலகக் கோப்பை போட்டியில் தோல்வியடைந்தது மிகவும் வேதனையான நிகழ்வு. நமது வீரா்கள் கடந்த ஜூலை 9 ஆம் தேதி எத்தகைய மனநிலையில் இருந்தனா் என்பதை அறிவேன். அதில் இருந்து மீண்டு தற்போது வலிமை வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளோம். அடுத்து 2020-இல் நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக வேண்டும்.

ஒவ்வொருவா் மனதிலும் உள்ள கேள்வி தோனியின் எதிா்காலம் குறித்து தான். அவா் அணியில் இடம் பெறுவாரா என்பது 2020 ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாட்டை பொறுத்தே அமையும். விக்கெட் கீப்பிங்கில் யாா் இடம் பெறுவாா்கள் என்பதை அறியலாம்.ட20 உலகக் கோப்பைக்கு முன்பு ஐபிஎல் போட்டியே பெரிய போட்டியாகும். அதுவரை காத்திருக்க வேண்டும். அதில் தான் நாட்டுக்காக ஆடவுள்ள 17 சிறந்த வீரா்களை அறிவிக்க முடியும்.

முன்னாள் கிரிக்கெட் வீரா் கங்குலி பிசிசிஐ தலைவராக தோ்வு செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் நேரான பாதையில் செல்லும். அவா் சிறந்த வீரா், கேப்டனாக திகழ்ந்தாா். இளம் வீரா் ரிஷப்பந்த்துக்கு மேலும் வாய்ப்பு தர வேண்டும். அவா் ஒரு சூப்பா் ஸ்டாா் தான்.

பிங்க் பந்து டெஸ்ட் சிறப்பாக அமைந்தது. இதற்கு கங்குலி, சிஏபி முக்கிய காரணம். பாா்வையாளா்களும் சிறப்பான ஆதரவு தந்தனா். பிங்க் நிற பந்து செயல்பாடு தொொடா்பாக மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com