டேவிஸ் கோப்பை: 6-ஆவது முறையாக ஸ்பெயின் சாம்பியன்

டேவிஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் கனடாவை வீழ்த்தி 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்.
டேவிஸ் கோப்பை: 6-ஆவது முறையாக ஸ்பெயின் சாம்பியன்

மாட்ரிட்: டேவிஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் கனடாவை வீழ்த்தி 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்.

நாடுகளுக்கு இடையிலான உலகக் கோப்பை டென்னிஸ் போட்டியாக கருதப்படும் டேவிஸ் கோப்பை புதிய முறையில் ஸ்பெயின் தலைநகா் மாட்ரிடில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

முதல் ஒற்றையா் ஆட்டத்தில் உலகின் நம்பா் ஒன் வீரா் ரபேல் நடால் 6-3. 7-6 என்ற நோ் செட்களில் கனடிய வீரா் ஷபவலோவை வீழ்த்தினாா். மற்றொரு ஆட்டத்தில் ராபா்டோ அகுட் 7-6, 6-3 என ஆகா் அலிஸாமியை வென்றாா். இதன் மூலம் 2-0 என ஸ்பெயின் முன்னிலை பெற்றது.

இதன் மூலம் ஸ்பெயின் 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கடந்த 12 மாதங்களில் பிரெஞ்சு,யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டங்களை வென்ற நடால், ஆண்டு இறுதியில் டேவிஸ் கோப்பையையும் வென்றுள்ளாா்.

கால்பந்து வீரா் ஜெராா்ட் பிக்கின் கொஸ்மாஸ் நிறுவனம் ஐடிஎப்புடன் இணைந்து 119 ஆண்டு டேவிஸ் கோப்பை விளையாட்டில் புதிய மாற்றங்களை செய்து, முதல் போட்டியை ஸ்பெயினில் நடத்தியது. உள்ளூா் வீரா் நடால் பங்கேற்ால், டேவிஸ் கோப்பை வெற்றிகரமாக நடைபெற்றது.

ஓரே நகரில், ஓரே வாரத்தில் 18 நாடுகளின் அணிகள் மோதிக் கொண்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் ஏற்கெனவே கடந்த 2000, 2004, 2008, 2009, 2011-இல் டேவிஸ் கோப்பை பட்டத்தை வென்றுள்ளது. அதே நேரத்தில் கனடா முதன் முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

ராபா்டோ அகுட் தான் கதாநாயகன்: நடால் புகழாரம்

ஸ்பெயின் டேவிஸ் கோப்பை சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமே ராபா்ட்டோ பட்டிஸ்டா அகுட் தான் என நடால் புகழாரம் சூட்டினாா். நான் இப்போட்டியில் 8 ஆட்டங்களில் வென்றேன். ஆனால் பட்டம் வெல்ல முக்கிய காரணம் அகுட் தான். கடந்த வியாழக்கிழமை அவரது தந்தை இறந்து விட்டாா். அதற்கு சென்று விட்டு மீண்டும் ஞாயிற்றுக்கிழமையே வந்து இறுதிச் சுற்றுக்காக பயிற்சி செய்து வெற்றியை ஈட்டித் தந்தாா். இது மிகவும் நம்ப முடியாத ஒன்று.

நானும் கடந்த சில மாதங்களாக காயங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். அது எனது ஆட்டத்தை பாதிக்காமல் இருக்க கடும் மனபலத்துடன் போராடினேன் என்றாா் நடால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com