'எதையும் பதிவு செய்வதற்கு முன்பு படியுங்கள்': பாகிஸ்தான் நடிகைக்கு ஹர்பஜன் வீசிய 'தூஸ்ரா'! 

'எதையும் பதிவு செய்வதற்கு முன்பு படியுங்கள் என்று  பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகைக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அறிவுரை கூறியுளளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

புது தில்லி: 'எதையும் பதிவு செய்வதற்கு முன்பு படியுங்கள் என்று  பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகைக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அறிவுரை கூறியுளளார்.

சமீபத்தில் நியூயாா்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் அமா்வில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கலந்துகொண்டு பேசினாா். ஒவ்வொருவரும் பேசுவதற்கு தலா 15 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இம்ரான் கான் 50 நிமிடங்கள் உரையாற்றினாா். அப்போது, ஜம்மு-காஷமீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததை அவா் மீண்டும் சா்வதேச பிரச்னையாக்குவதற்கு முயற்சி செய்தாா். அப்போது அவா், காஷ்மீரில் 80 லட்சம் போ் விலங்குகளைப் போல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். முதல் கட்டமாக, ஜம்மு-காஷ்மீரில் மனித்தன்மையற்ற வகையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இந்தியா தளா்த்த வேண்டும். அதைத் தொடா்ந்து, அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவா்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். காஷ்மீா் மக்களுக்கு சுயநிா்ணய உரிமையை சா்வதேச சமூகம் அளிக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இந்தியா தளா்த்தியதும் அங்கு நிலைமை மோசமாகும். அப்போதும், பாகிஸ்தானை இந்தியா குற்றம்சாட்டும். இந்தியாவும், பாகிஸ்தானும் அணுசக்தி நாடுகள். பாகிஸ்தானுக்கும், அதைவிட பல மடங்கு பெரிதாக இருக்கும் இந்தியாவுக்கும் இடையே போா் மூண்டால் என்ன நடக்கும்? விளைவுகள் பயங்கரமாக இருக்கும். இதை மிரட்டலாக நான் கூறவில்லை, முன்னெச்சரிக்கையாக கூறுகிறேன்' என்று பேசினார்.

அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஐ.நா பொதுச்சபை உரையில் இந்தியா மீதான அணு ஆயுத யுத்தம் குறித்து பேசப்பட்டுள்ளது. குறிப்பாக முக்கியமான விளையாட்டு வீரராக இருந்த இம்ரான் கான் பயனபடுத்தியுள்ள வார்த்தைகள் இரு நாடுகளிடையே பகைமையை வளர்ப்பதாக உள்ளது. ஒரு சக விளையாட்டு வீரனாக அவர் சமாதானத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

அவரது இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகையான வீணா மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரதமர் இம்ரான் தனது உரையில் சமாதானத்தை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் காஷ்மீரில் உறுதியாக நிலவ உள்ள சூழல் பற்றியே அவர் குறிப்பிட்டுள்ளார். இது பயமுறுத்தல் இல்லை; அச்சம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதா?' என்று தெரிவித்திருந்தார்.

தனது பதிவில் அவர் உறுதியாக என்னும் பொருள்படும் 'surly' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். 

இந்நிலையில் 'எதையும் பதிவு செய்வதற்கு முன்பு படியுங்கள்' என்று வீனா மாலிக்குக்கு ஹர்பஜன் சிங் அறிவுரை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வீணா மாலிக்கின் பதிவிற்கு பதிலளித்து செவ்வாயன்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

Surly என்று இதைக் கூறுகிறீர்கள்? ஓ.. அது surely-ஆ? அடுத்தமுறை எதையும் பதிவு செய்வதற்கு முன்பு படித்து விட்டு பதிவு செய்யுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com