வெளிநாட்டு டெஸ்ட் வெற்றிகளுக்கு இரு மடங்குப் புள்ளிகள்: விராட் கோலி பரிந்துரை!

டெஸ்ட் அணியில் தனக்கு ஏன் இடமில்லை என்று குல்தீப் யாதவுக்குத் தெரியும். அணிக்காக நம்மால் என்ன செய்ய முடியும் என்றுதான்...
வெளிநாட்டு டெஸ்ட் வெற்றிகளுக்கு இரு மடங்குப் புள்ளிகள்: விராட் கோலி பரிந்துரை!

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

2-வது டெஸ்ட் புணேவில் வியாழன் முதல் தொடங்குகிறது. செய்தியாளர்களை இன்று சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

புள்ளிகள் பட்டியலைத் தயாரிக்க என்னைச் சொன்னால், வெளிநாட்டு டெஸ்ட் வெற்றிகளுக்கு இரு மடங்குப் புள்ளிகளை வழங்கப் பரிந்துரைப்பேன். முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு இதை அமல்படுத்தலாம். ஒவ்வொரு டெஸ்ட் வெற்றிகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படுவதால் டிராவுக்குப் பதிலாக வெற்றியை அடையவே அணிகள் விரும்பும். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு நல்லது. 

ரோஹித் சர்மாவைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டாம். அவர் தன் திறமையை நிரூபித்துவிட்டார். எனவே அவர் தனது பேட்டிங் திறமையை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்த அனுமதியுங்கள். வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களை அவர் எந்தளவுக்கு ரசித்து ஆடுகிறாரோ அதுபோல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடட்டும்.

டெஸ்ட் அணியில் தனக்கு ஏன் இடமில்லை என்று குல்தீப் யாதவுக்குத் தெரியும். அணிக்காக நம்மால் என்ன செய்ய முடியும் என்றுதான் எல்லோரும் எண்ணுகிறார்கள். குல்தீப்புக்கும் அதேபோலத்தான். இந்தியாவில் அஸ்வின், ஜடேஜாவுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை அவர் அறிந்து வைத்துள்ளார். இவர்கள் இருவரும் பேட்டிங்கிலும் அணிக்காகப் பங்களிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com