2-வது டெஸ்ட்: 26-வது டெஸ்ட் சதமெடுத்தார் விராட் கோலி! ரஹானே அரை சதம்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் சதமும் துணை கேப்டன் ரஹானே அரை சதமும் எடுத்துள்ளதால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. 
2-வது டெஸ்ட்: 26-வது டெஸ்ட் சதமெடுத்தார் விராட் கோலி! ரஹானே அரை சதம்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் சதமும் துணை கேப்டன் ரஹானே அரை சதமும் எடுத்துள்ளதால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. 

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

2-வது டெஸ்ட் புணேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் விஹாரி நீக்கப்பட்டு, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 85.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. கோலி 63, ரஹானே 18 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

நேற்று காலையில் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. அதேபோல இன்று காலையும் விக்கெட்டுகளை வீழ்த்தும் எண்ணத்தில் துல்லியமாகப் பந்துவீசினார்கள் தெ.ஆ. பந்துவீச்சாளர்கள். இதனால் நான்காவது ஓவரில்தான் முதல் பவுண்டரி கிடைத்தது. 96-வது ஓவரில் கோலி - ரஹானே கூட்டணி 100 ரன்களைத் தொட்டது. இது மட்டும் நிகழாமல் போயிருந்தால் இந்திய அணி மிகவும் சிரமத்தை எதிர்கொண்டிருக்கும். இவர்களுக்குப் பின்னால் வருபவர்கள் எல்லோரும் விக்கெட் கீப்பரும் பந்துவீச்சாளர்களும்தான். இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு அந்தச் சூழல் சாதகமாக இருந்திருக்கும். ஆனால் கவனமாக விளையாடி அப்படியொரு நிலைமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள் கோலியும் ரஹானேவும். இன்றைய நாளின் முக்கியமான முதல் ஒரு மணி நேரத்தில் விக்கெட் எதுவும் விழவில்லை. 141 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார் ரஹானே. சூழலைப் புரிந்துகொண்டு அற்புதமான பேட்டிங் திறமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த இன்னிங்ஸில் முக்கியமான சாதனை ஒன்றை நிகழ்த்தினார் கோலி. இந்திய முன்னாள் வீரர் வெங்சர்கார் 116 டெஸ்டுகளில் எடுத்த 6868 டெஸ்ட் ரன்களை இந்த இன்னிங்ஸில் கடந்தார் கோலி. இதன் அடிப்படையில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் 7-ம் இடத்தைப் பிடித்தார் கோலி. 

கடந்த வருடம் டிசம்பரில் பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சதமடித்தார் கோலி. அதன்பிறகு அவர் 5 டெஸ்டுகள் விளையாடியும் அடுத்தச் சதத்தை எடுக்கமுடியவில்லை. இதனால் இந்த டெஸ்டில் கோலி சதமெடுப்பார் என்கிற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருந்தார்கள். அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றினார் கோலி. இதுதான் 2019-ல் கோலி எடுக்கும் முதல் சதம். 

பிலாண்டரின் பந்தில் அழகான ஸ்டிரைட் டிரைவ் அடித்து தனது 26-வது டெஸ்ட் சதத்தை 173 பந்துகளில் பூர்த்தி செய்தார் விராட் கோலி. இதன்பிறகு கோலி - ரஹானே கூட்டணி 150 ரன்களைக் கடந்தது. 

2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 113 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 104, ரஹானே 58 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com