உலக மகளிர் குத்துச்சண்டை: அரையிறுதியில் மேரி கோம் தோல்வி!

ரஷியாவின் உலன் உடேவில் அக். 3-ம் தேதி தொடங்கிய உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் அரையிறுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.

மேரி கோம் ஏற்கெனவே 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளாா். இந்நிலையில் 51 கிலோ எடைப் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் துருக்கியின் புஸுனாஸ் காகிரோக்லுவை எதிர்கொண்டார் மேரி கோம். மேரி கோமின் வெற்றியை அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், 1-4 என்கிற புள்ளிக்கணக்கில் அவர் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார்

இதன்மூலம், உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் 8-வது பதக்கம் வென்ற ஓரே வீராங்கனை என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளாா் இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம். 48 கிலோ எடைப்பிரிவில் அவா் 6 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தாா் மேரி. 51 கிலோ எடைப்பிரிவில் மேரி கோம் வெல்லும் முதல் பதக்கம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com