Enable Javscript for better performance
Tea, Day Three- Dinamani

சுடச்சுட

    

    ஃபாலோ ஆன் அபாயத்தில் தென் ஆப்பிரிக்கா: தேநீர் இடைவேளையின்போது 197/8

    By எழில்  |   Published on : 12th October 2019 02:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kohli_2nd_test_PTI10_12_2019_000031B

     

    இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி, 3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது  8 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்துள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் புணேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை 601/5 ரன்களில் டிக்ளேர் செய்தார் கோலி. கோலி 254 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவருடைய அதிகபட்ச டெஸ்ட் ரன்களாகும். 2-வது நாளின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில், 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. டி புருயன் 20, அன்ரிச் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

    துரதிர்ஷ்டவசமாக தென் ஆப்பிரிக்க அணியின் தடுமாற்றம் இன்றும் தொடர்ந்தது. நைட்வாட்ச்மேன் அன்ரிச் நாா்ட்ஜே ஷமியின் பந்துவீச்சில் கோலியின் அற்புதமான கேட்சினால் 3 ரன்களில் வெளியேறினார். அடுத்தச் சில ஓவர்களில், நன்கு விளையாடி 30 ரன்கள் எடுத்த டி புருயின் கொடுத்த கேட்சைப் பாய்ந்து சென்று பிடித்து அவரை வெளியேற்றினார் விக்கெட் கீப்பர் சஹா. இது உமேஷ் யாதவின் மூன்றாவது விக்கெட். இதையடுத்துச் சரிவைத் தடுக்கும் பொறுப்பு டு பிளெஸ்ஸிஸ் - டி காக் வசம் வந்தது. சற்று விரைவாக ரன்கள் சேர்த்த டு பிளெஸ்ஸிஸ் 64 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். 

    16 ஓவர்கள் வரை நீடித்த டு பிளெஸ்ஸிஸ் - டி காக் கூட்டணியைப் பிரித்தார் அஸ்வின். 48 பந்துகளில் 31 ரன்களில் சேர்த்த டி காக்கை அற்புதமான பந்தில் வீழ்த்தினார். இதனால் தென் ஆப்பிரிக்காவின் நிலைமை இன்னும் மோசமானது.

    3-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 42 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 52, முத்துசாமி 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். தென் ஆப்பிரிக்க அணிக்கு 4 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 465 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதனால் அந்த அணி ஃபாலோ ஆனை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.

    மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு உடனே முத்துசாமியை 7 ரன்களில் வெளியேற்றினார் ஜடேஜா. அஸ்வினும் ஜடேஜாவும் தொடர்ந்து பந்துவீசி தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு அதிக நெருக்கடி அளித்தார்கள். நிலைத்து நின்று விளையாடிய டு பிளெஸ்ஸிஸை 64 ரன்களில் வெளியேற்றினார் அஸ்வின். இதனால் மீதமுள்ள இரு விக்கெட்டுகளும் எளிதாக வீழ்ந்துவிடும் என ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால் பிறகு ஜோடி சேர்ந்த பிலாண்டரும் மஹாராஜாவும் 18.3 ஓவர்கள் வரை விளையாடி 35 ரன்கள் சேர்த்தார்கள்.

    3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி 77 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்துள்ளது. 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க அணி, 404 ரன்கள் பின்தங்கியுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai