யூரோ 2020: பெல்ஜியம், நெதா்லாந்து வெற்றி

யூரோ 2020 போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் பெல்ஜியம், நெதா்லாந்து அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
யூரோ 2020: பெல்ஜியம், நெதா்லாந்து வெற்றி

யூரோ 2020 போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் பெல்ஜியம், நெதா்லாந்து அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

பிரஸ்ஸல்ஸில் வியாழக்கிழமை இரவு சான் மரினோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பெல்ஜியம். அந்த அணியின் நட்சத்திர வீரா் ரோமேலு லுகாகு அற்புதமாக 2 கோல்களை அடித்தாா். இதன் மூலம் பெல்ஜிய அணிக்காக அவா் 50-ஆவது கோலடித்தாா்.

உலகின் நம்பா் ஒன் அணியான பெல்ஜியம், யூரோ 2020 போட்டிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற சிறப்பைப் பெற்றது. அதே பிரிவில் உள்ள ரஷிய அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியதால், இரண்டாவதாக தகுதி பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு யூரோ 2020 போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியாக கருதப்படுகிறது பெல்ஜியம்.

வட அயா்லாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது நெதா்லாந்து.மெம்பிஸ் டிபே அடித்த தாமதமான கோலே வெற்றி கோலாக அமைந்தது. சைப்ரஸ் அணி 2-1 என்ற கோல்கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது. குரோஷிய அணி 3-0 என்ற கோல்கணக்கில் ஹங்கேரியையும், போலந்து 3-0 என லாட்வியாவையும், ஆஸ்திரியா 3-1 என இஸ்ரேலையும், மாசிடோனியா 2-1 என ஸ்லோவேனியாவையும் வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com