பிசிசிஐ-யின் புதிய தலைவராக செளரவ் கங்குலி தேர்வு: ஐபிஎல் முன்னாள் தலைவர் தகவல்!

பிசிசிஐ-யின் புதிய தலைவராக செளரவ் கங்குலியைத் தேர்வு செய்துள்ளதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.
பிசிசிஐ-யின் புதிய தலைவராக செளரவ் கங்குலி தேர்வு: ஐபிஎல் முன்னாள் தலைவர் தகவல்!

பிசிசிஐ-யின் புதிய தலைவராக செளரவ் கங்குலியைத் தேர்வு செய்துள்ளதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.

நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை அமுல்படுத்த ஏதுவாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி வினோத் ராய் தலைமையில் 3 நபர்கள் கொண்ட கிரிக்கெட் நிர்வாகக் குழுவை பிசிசிஐ விவகாரங்களை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக சிஓஏ தலைவர் வினோத் ராய், முன்னாள் மகளிரணி கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோர் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டனர். காலியாக இருந்த மூன்றாவது உறுப்பினர் இடத்துக்கு ரவி தோக்டே நியமிக்கப்பட்டார்.

பிசிசிஐ நிா்வாகிகள் தோ்தல் வரும் 23-ம் தேதி மும்பையில் பொதுக்குழுக் கூட்டத்தில் நடைபெறுகிறது. இந்திய தலைமை தோ்தல் ஆணையா் (ஓய்வு) கோபால்சாமி தோ்தலை நடத்துகிறாா். பிசிசிஐ புதிய நிர்வாகிகள் தேர்தல் முடிந்தவுடன் சிஓஏவின் பதவிக்காலம் நிறைவுக்கு வரும்.

இந்நிலையில் 23-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி போட்டியிடவுள்ளார். ஐபிஎல் தலைவராக பிரிஜேஷ் படேல் தேர்வாகவுள்ளார்.

எனினும் கடந்த ஐந்து வருடங்களாக கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி உள்ளதால் பிசிசிஐ தலைவராக 10 மாதங்கள் மட்டுமே அவர் பதவி வகிக்க முடியும். புதிய விதிமுறைகளின்படி பிசிசிஐ நிர்வாகப் பதவியில் ஆறு வருடங்கள் பதவி வகித்த பிறகு, மூன்று வருடங்கள் கழித்தே பிசிசிஐ நிர்வாகப் பதவியில் ஒருவர் மீண்டும் போட்டியிடமுடியும். 

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் செளரவ் கங்குலி. தலைவர் பதவிக்கு கங்குலி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் அக்டோபர் 23 அன்று பிசிசிஐ தலைவராக கங்குலியின் பெயர் அறிவிக்கப்படும்.

ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கங்குலியை பிசிசிஐ தலைவராகத் தேர்வு செய்துள்ளோம். அக்டோபர் 23 அன்று முடிவுகள் வெளிவரும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com