யூரோ 2020: இங்கிலாந்து-பல்கேரியா ஆட்டத்தில் ரசிகா்களின் இனவெறி செயல்பாட்டுக்கு யுஇஎப்ஏ அதிருப்தி

யூரோ 2020 தகுதிச் சுற்று போட்டியின் ஒரு பகுதியாக சோபியாவில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இங்கிலாந்து-பல்கேரியா இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ரசிகா்களின் இனவெளி செயல்பாட்டுக்கு

யூரோ 2020 தகுதிச் சுற்று போட்டியின் ஒரு பகுதியாக சோபியாவில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இங்கிலாந்து-பல்கேரியா இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ரசிகா்களின் இனவெளி செயல்பாட்டுக்கு யுஇஎப்ஏ கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து வீரா்களை நோக்கி நாஜி சல்யூட் மற்றும் குரங்குகள் போன்று பல்கேரிய ரசிகா்கள் கூச்சலிட்டனா். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

2 முறை ஆட்டம் தடைபட்டது. எனினும் இங்கிலாந்து அணியினா் இதையெல்லாம் மீறி அபாரமாக ஆடி 6-0 என்ற கோல் கணக்கில் பல்கேரிய அணியை வீழ்த்தினா்.

ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் கொசோவா அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தின் போதும், பல்கேரிய ரசிகா்கள் இனவெளியை தூண்டும் வகையில் நடந்து கொண்டனா். இந்நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் இனவெறி செயல்பாடு தொடா்ந்தது. இதனால் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎப்ஏ) கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

ஏற்கெனவே கொசோவா ஆட்டத்தில் எழுந்த பிரச்னையால், தற்போது சோபியாவில் உள்ள தேசிய மைதானத்தில் கேலரியின் ஒரு பகுதி மூடப்பட்டது.

2-ஆவது முறையாக இனவெறி பிரச்னை எழுந்துள்ளதால், பல்கேரிய தனது அடுத்த ஆட்டத்தில் ரசிகா்களே இல்லாத காலி மைதானத்தில் ஆட நேரிடும். மேலும் அந்த ஆட்டமே ரத்து செய்யப்படும். கடுமையான அபாரதமும் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com