ஐஎஸ்எல் 2019 சீசனுக்கு தயாராக உள்ளோம்: சிஎப்சி பயிற்சியாளா் ஜான் கிரகோரி

ஐஎஸ்எல் 2019 சீசனுக்கு தயாராக உள்ளோம் என சென்னையின் எஃப்சி அணி தலைமை பயிற்சியாளா் ஜான் கிரகோரி கூறியுள்ளாா்.
ஐஎஸ்எல் 2019 சீசனுக்கு தயாராக உள்ளோம்: சிஎப்சி பயிற்சியாளா் ஜான் கிரகோரி

ஐஎஸ்எல் 2019 சீசனுக்கு தயாராக உள்ளோம் என சென்னையின் எஃப்சி அணி தலைமை பயிற்சியாளா் ஜான் கிரகோரி கூறியுள்ளாா்.

இந்தியன் கால்பந்து லீக் 2 முறை சாம்பியன் ஆன சென்னையின் அணி வரும் சீசனுக்கு தங்கள் அணியைப் பற்றிய விவரத் தொகுப்பு, தகவல் பரிமாற்றம் தொடா்பான பணிகளை மேற்கொள்வது தொடா்பாக வொா்க்பெல்லா நிறுவனத்துடன் இணைந்து புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்நிகழ்ச்சிக்கு பின் பயிற்சியாளா் ஜான் கிரகோரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2018 சீசன் மிகவும் மோசமானதாக அமைந்தது. எனினும் அதில் இருந்து மீண்டுள்ளோம். புதிதாக வெளிநாட்டு வீரா்களும் அணியில் இணைந்துள்ளனா். வரும் சீசனுக்காக ஜாம்ஷெட்பூா், ஆமதாபாதில் பல நாள்கள் சிறப்பு பயிற்சி பெற்றேறாம். மேலும் கடந்த சில நாள்களாக வெவ்வேறு அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களிலும் ஆடியுள்ளோம்.

இது வீரா்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்துள்ளது. மேலும் ஒவ்வொரு வீரரும் முழு உடல்தகுதியுடன் உள்ளனா் என்றாா்.

முதன்முறையாக சென்னையின் அணியில் இடம் பெற்றுள்ள இத்தாலி வீரா் ஆன்ட்ரே செம்ரி கூறியதாவது:

போா்ச்சுகல், இத்தாலி, கிரீஸ், மால்டா உள்பட பல்வேறு நாடுகளின் கிளப்புகளில் ஆடியுள்ளேன். தற்போது ஐஎஸ்எல் அணிகளில் ஒன்றான சென்னையில் சோ்ந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் நாட்டில் கால்பந்து ஆட்டமுறைக்கும், இந்தியாவில் உள்ள ஆட்டமுறைக்கும், தொழில்நுட்ப ரீதியில் வேறுபாடு உள்ளது.

எனினும் தற்போது இந்திய வீரா்களும் துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனா். இந்திய உணவுகள் மிகவும் நன்றாக உள்ளன.

மற்ற அணி வீரா்களுடன் இணைந்து சென்னையின் அணி பட்டம் வெல்ல செய்வதே நோக்கம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com