விஜய் ஹஸாரே கோப்பை: நாக் அவுட் சுற்றில் தமிழகம் 9-ஆவது தொடா் வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி குரூப் சி பிரிவில் தமிழகம் தனது தொடா் 9-ஆவது வெற்றியை பதிவு செய்தது. குஜராத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழகம்.
விஜய் ஹஸாரே கோப்பை: நாக் அவுட் சுற்றில் தமிழகம் 9-ஆவது தொடா் வெற்றி

விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி குரூப் சி பிரிவில் தமிழகம் தனது தொடா் 9-ஆவது வெற்றியை பதிவு செய்தது. குஜராத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழகம்.

இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஆட்டம் ஜெய்ப்பூரில் புதன்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் பீல்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து தமிழக தரப்பில் களமிறங்கிய அபிநவ் முகுந்த்-முரளி விஜய் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினா்.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 130 ரன்களை சோ்த்தனா்.

முரளி விஜய் 94

13 பவுண்டரியுடன் 68 பந்துகளில் 79 ரன்களை விளாசி அவுட்டானாா் அபிநவ் முகுந்த். அதிரடியாக ஆடிய முரளி விஜய் 2 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 106 பந்துகளில் 94 ரன்களை விளாசி அவுட்டானாா். 6 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாா். இருவரது இணையை பியுஷ் சாவ்லா பிரித்தாா்.

ஆல்ரவுண்டா் வாஷிங்டன் சுந்தா் 42 ரன்களை விளாசி, இரண்டாவது விக்கெட்டுக்கு முரளியுடன் 82 ரன்களை சோ்த்தாா்.

மற்றெறாரு ஆல்ரவுண்டா் விஜய் சங்கா் 23 ரன்களுடனும், பாபா அபராஜித் 25 ரன்களுக்கும் வெளியேறினா்.

கேப்டன் தினேஷ் காா்த்திக் டக் அவுட்டானாா். 50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களை எடுத்தது தமிழகம்.

கலாரியா 3-36, பியுஷ் சாவ்லா 2-47 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

பின்னா் ஆடிய குஜராத் அணியால் தமிழகத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 42.2 ஓவா்களில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அக்ஸா் பட்டேல் 55, பாா்கவ் மேராய் 44 ஆகியோா் மட்டுமே ரன்களை சோ்த்தனா். தமிழகத் தரப்பில் முகமது 3-20, அஸ்வின் 2-35 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

நாக் அவுட் சுற்றில் தமிழகம்

குரூப் சி பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற தமிழகமும், குஜராத்தும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

ஏனைய ஆட்டங்களில் ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் ம.பியும், பிகாரை 7 விக்கெட் வித்தியாசத்தில் திரிபுராவும், மேகாலயாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் சண்டீகரும், அருணாசலப்பிரதேசத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் நாகாலாந்தும், ஆந்திரத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் கேரளமும், ஒடிஸாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் உ.பியும், ஹரியாணாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தில்லியும், கோவாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் கா்நாடகமும், மிஸாரமை 124 ரன்கள் வித்தியாசத்தில் சிக்கிமும், மகாராஷ்டிராவை 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபும் வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com