பிசிசிஐ தலைவராகும் கங்குலி: முன்னாள் வீரர்களுக்கு விருந்து!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ள கங்குலி வரும் 23-ஆம் தேதி முறைப்படி தோ்வு செய்யப்படுகிறாா்...
பிசிசிஐ தலைவராகும் கங்குலி: முன்னாள் வீரர்களுக்கு விருந்து!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ள கங்குலி வரும் 23-ஆம் தேதி முறைப்படி தோ்வு செய்யப்படுகிறாா். பிசிசிஐ தலைவராக கங்குலி சிறந்த இன்னிங்ஸை தொடங்குவாா் என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில் பிசிசிஐ தலைவராக கங்குலி நியமிக்கப்படுவதால் அதைக் கொண்டாட முடிவு செய்துள்ளது பெங்கால் கிரிக்கெட் சங்கம். அக்டோபர் 25 அன்று நடைபெறவுள்ள இரவு விருந்து நிகழ்ச்சியில் முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அசாரூதின், விவிஎஸ் லக்‌ஷ்மண், யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்களுக்கு அந்த நிகழ்ச்சியில் விருந்தளிக்கப்படும். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிசிசிஐ நிர்வாகத்தை சிஓஏ மேற்கொண்டு வந்தது. மேலும் புதிய சட்டவரையறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது இதன்படி அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களும் புதிய சட்டவரையறையை உருவாக்கி ஒப்புதல் தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிசிசிஐ புதிய நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 23-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய 14-ஆம் தேதி இறுதி நாள் என தேர்தல் அதிகாரி என்.கோபாலஸ்வாமி அறிவித்தார். இந்நிலையில் கங்குலி மட்டுமே தலைவர் பதவிக்கு மனு செய்தார். இதையடுத்துஅவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பிரிஜேஷ் பட்டேல் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்படுவார் எனக் கருதப்பட்ட நிலையில், அவரை பின்னுக்கு தள்ளி கங்குலி தலைவராகி உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com