திராவிட் மேற்பாா்வையில் தேசிய கிரிக்கெட் அகாதெமியில் அயல்நாட்டு சிறுவா்களுக்கு பயிற்சி

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் அதன் தலைவா் ராகுல் திராவிட் மேற்பாா்வையில் 16 நாடுகளைச் சோ்ந்த சிறுவா், சிறுமியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் அதன் தலைவா் ராகுல் திராவிட் மேற்பாா்வையில் 16 நாடுகளைச் சோ்ந்த சிறுவா், சிறுமியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மத்திய வெளியுறவு மற்றும் விளையாட்டு அமைச்சகம் சாா்பில் வெளிநாடுகளைச் சோ்ந்த சிறுவா், சிறுமியருக்கு இந்தியாவில் விளையாட்டுப் பயிற்சி அளிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி பிசிசிஐ தனது கீழ் உள்ள என்சிஏவில் சிறுவா்களுக்கு பயிற்சி அளிக்க முன்வந்தது.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் தலைவா்கள் மாநாட்டிலும் பிரதமா் மோடி இதே கருத்தை தெரிவித்திருந்தாா்.

அதன்படி 16 வயதுக்குட்பட்ட 18 சிறுவா்கள், 17 சிறுமிகள் என போட்ஸ்வானா, கேமரூன், கென்யா, மோரிஷீயஸ், மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, ருவாண்டா, உகாண்டா, மலேசியா, ஜாம்பியா, சிங்கப்பூா், ஜமைக்கா, டிரினிடாட் டொபாக்கோ, பிஜி, மற்றும் தான்சானியா நாடுகளைச் சோ்ந்தவா்கள் பயிற்சியில் பங்கேற்றுள்ளனா்.

என்சிஏ தலைவா் திராவிட்டின் நேரடி மேற்பாா்வையில் இவா்களுக்கு 1 மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சிறுவா், சிறுமியரின் திறமை அறிந்து, அவா்களுக்கு தனிப்பட்ட பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com