"இப்போ வராத": 95 ரன்கள் எடுத்திருந்தபோது மழையுடன் பேச்சுவார்த்தை நடத்திய ரோஹித் சர்மா!

தென் ஆப்பிரிக்காவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாளில் மழை குறுக்கிட்டபோது, ரோஹித் சர்மா இப்போ வேண்டாம் என்று கூறிய காட்சி தற்போது வெளியாகியிருக்கிறது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தின் 3-வது செஷன் போதிய வெளிச்சமின்மை காரணமாகவும், மழை காரணமாகவும் கைவிடப்பட்டது. இதனால், இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 117 ரன்களுடனும், அஜின்க்யா ரஹானே 83 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதில், ரோஹித் சர்மா 95 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை பெய்தது. இதனால், மைதான பராமரிப்பாளர்கள் ஆடுகளத்தை மூடுவதற்குத் தயாராக இருந்தனர். அப்போது, ரோஹித் சர்மா வானத்தை நோக்கி "தற்போது வேண்டாம்" என்று கூறும் காட்சி வெளியாகியுள்ளது.

இதன்பிறகு, டேன் பீட் ஓவரில் ரோஹித் சர்மா அட்டகாசமாக சிக்ஸர் அடித்து தனது சதத்தை எட்டினார். 

இதுதொடர்பான விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com