"இதோ இங்கேதான் இருக்கிறார்.. வாருங்கள், வந்து ஹலோ சொல்லுங்கள்": செய்தியாளரைக் கலாய்த்த விராட்!

தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சௌரவ் கங்குலி பேசியது தொடர்பான கேள்விக்கு கேப்டன் விராட் கோலி பதிலளித்தார்.
"இதோ இங்கேதான் இருக்கிறார்.. வாருங்கள், வந்து ஹலோ சொல்லுங்கள்": செய்தியாளரைக் கலாய்த்த விராட்!


தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சௌரவ் கங்குலி பேசியது தொடர்பான கேள்விக்கு கேப்டன் விராட் கோலி பதிலளித்தார்.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய பிறகு இந்தியக் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பிசிசிஐ தலைவராகத் தேர்வாகவுள்ள சௌரவ் கங்குலி மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து விராட் கோலியிடம் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த விராட் கோலி, "சௌரவ் கங்குலிக்கு வாழ்த்து தெரிவித்தேன். பிசிசிஐ தலைவராக அவர் தேர்வாகியுள்ளது சிறப்பான ஒன்று. ஆனால், அவர் இதுவரை தோனி குறித்து என்னிடம் எதுவும் பேசவில்லை. அவருக்கு எப்போது என்னைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போது நிச்சயம் தொடர்பு கொள்வார். அவர் அழைக்கும்போதும் நான் நிச்சயம் சென்று அவரைச் சந்திப்பேன்" என்றார்.

இதையடுத்து, தோனியைப் போய் சந்திப்பீர்களா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த விராட் கோலி, "இதோ அவர் இங்கே ஓய்வறையில்தான் இருக்கிறார். வாருங்கள், வந்து ஹலோ சொல்லுங்கள்" என்று கலாய்த்தார்.

உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கவில்லை. வங்கதேசத்துடனான டி20 தொடரிலும் அவர் பங்கேற்பது சந்தேகமாகவே உள்ளது.

இந்நிலையில், பிசிசிஐ தலைவராகத் தேர்வாகவுள்ள சௌரவ் கங்குலி இதுகுறித்து பேசுகையில், "தேர்வுக் குழுவினர் மற்றும் தோனியின் மனதில் இருப்பதைக் கண்டறிவதற்காக அவர்களிடம் பேசவுள்ளேன்" என்றார். இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிசிசிஐ தலைவர் இந்தியக் கேப்டனைச் சந்திப்பதைப் போல் விராட் கோலியைச் சந்திக்கவுள்ளேன். வங்கதேசத்துடனான டி20 தொடரில் ஓய்வு வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து விராட் கோலியே முடிவு செய்வார்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com