விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்.

ராஞ்சி டெஸ்ட்: ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்  ஆட்டத்தில் பாலோ ஆனைத் தொடர்ந்து 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களுடன் தோல்வியின் விளிம்பில் உள்ளது தென்னாப்பிரிக்கா.


இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்  ஆட்டத்தில் பாலோ ஆனைத் தொடர்ந்து 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களுடன் தோல்வியின் விளிம்பில் உள்ளது தென்னாப்பிரிக்கா.
இந்தியா முதல் இன்னிங்ஸில் 497/9 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் தொடர்ச்சியாக பாலோ ஆன் அழைக்கப்பட்டதால், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்ட நேர முடிவில் 132/8 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் இத்தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியுள்ளது. இதன் மூன்றாவது மற்றும் இறுதி ஆட்டம் ராஞ்சியில் நடந்து வருகிறது.  இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்கா ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன்களை எடுத்திருந்தது. 
இந்நிலையில் திங்கள்கிழமை மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து ரன்களை சேர்க்க திணறியது. கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 1, ஹென்ரிச் கிளாஸன் 6, டேன் பீட் 4, காகிúஸா ரபாடா 0 என சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.
ஜுபேர் ஹம்ஸா அரைசதம்: பலமான இந்தியாவின் பந்துவீச்சை சமாளித்து ஜுபேர் ஹம்ஸா 62, டெம்பா பவுமா 32, ஜார்ஜ் லிண்டே 37 ஆகியோர் மட்டுமே ஓரளவு ரன்களை சேர்த்தனர்.
கடைசி விக்கெட்டாக அன்ரிச் நார்ட்ஜேவை 4 ரன்களுக்கு எல்பிடபிள்யு ஆக்கினார் ஷாபாஸ் நதீம்
56.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்கா.
உமேஷ் யாதவ் 3 விக்கெட்: அபாரமாக பந்துவீசிய உமேஷ்யாதவ் 3-40 விக்கெட்டுகளையும், ஷமி 2-22, ஷாபாஸ் நதீம் 2-22. ஜடேஜா 2-19 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இந்தியாவைக் காட்டிலும் 335 ரன்கள் பின்தங்கி இருந்தது தென்னாப்பிரிக்கா.
தென்னாப்பிரிக்கா பாலோ ஆன்: இதைத் தொடர்ந்து பாலோ ஆனை தொடருமாறு கேப்டன் கோலி வலியுறுத்தினார்.
ஆரம்பமே அதிர்ச்சி: குவின்டன் டி காக், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், உமேஷ் பந்துவீச்சில் 5 ரன்களுடன் போல்டானார் டி காக்.
முகமது ஷமி அதிரடி பந்துவீச்சு: முதல் இன்னிங்ஸில் அரைசதம் விளாசிய ஜுபேர் ஹம்ஸாவை டக் அவுட்டாக்கினார் முகமது ஷமி.
பின்னர் டீன் எல்கர், கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.ஆனால் ஷமியின் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆகி 4 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார் டுபிளெஸ்ஸிஸ்.
அவரைத் தொடர்ந்து டெம்பா பவுமாவும் ரன் ஏதும் எடுக்காமல் ஷமி பந்துவீச்சில் சாஹாவிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.
அப்போது 4 விக்கெட் இழப்புக்கு 22 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது தென்னாப்பிரிக்கா.  
விக்கெட் வீழ்ச்சி: அவரைத் தொடர்ந்து ஹென்ரிச் கிளாஸன் 5, காகிúஸா ரபாடா 12 ரன்களுக்கு வெளியேறினர்.
ஜார்ஜ் லிண்டே 27, டேன் பீட் 23 ஆகியோர் மட்டுமே ஓரளவு நிலைத்து ஆடி ரன்களை சேர்த்து அவுட்டாயினர். 
திங்கள்கிழமை ஆட்ட நேர முடிவில் 46 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களுடன் திணறி வருகிறது தென்னாப்பிரிக்கா. 
டி புருயன் 30 ரன்களுடனும், அன்ரிச் நார்ட்ஜே 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஷமி அபாரம் 3 விக்கெட்: இந்திய தரப்பில் முகமது ஷமி அற்புதமாக பந்துவீசி 3-10 விக்கெட்டுகளையும், உமேஷ் 2-35, ஜடேஜா 1-36, அஸ்வின் 1-28 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
203 ரன்கள் பின்னடைவு: இன்னிங்ஸ் தோல்வியின் விளிம்பில் உள்ள தென்னாப்பிரிக்கா 203 ரன்கள் இந்தியாவைக் காட்டிலும் பின்தங்கி உள்ளது.
டீன் எல்கர், ரித்திமான் சாஹா காயம்
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையில் ராஞ்சியில் நடைபெற்று வரும் டெஸ்ட்டில் மூன்றாவது நாளான திங்கள்கிழமை தென்னாப்பிரிக்க வீரர் டீன் எல்கர், இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா ஆகியோர் காயமடைந்தனர்.
தேநீர் இடைவேளைக்கு முன்பு உமேஷ் யாதவ் வீசிய பவுன்சர் பந்தை தவிர்க்க முயன்ற போதும், டீன் எல்கர் காது பகுதியில் பந்து பலமாக தாக்கியது. இதில் காயமடைந்து கீழே விழுந்தார் எல்கர். இதனால் அவர் மருத்துவ சோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு பதிலாக டி புருயன் களமிறங்கினார். 
ரித்திமான் சாஹா: அதே போல் இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா, 27-ஆவது ஓவரின் போது அஸ்வின் பந்துவீச்சில், ஜார்ஜ் லிண்டே அடிக்காமல் விட்ட பந்தை பிடிக்க முயன்ற போது இடதுகை பெருவிரலில் காயமடைந்தார். இதனால் அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கடைசி கட்டத்தில் அப்பணியை மேற்கொண்டார். 
35 வயதான சாஹா ஏற்கெனவே தோள்பட்டையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக 20 மாதங்கள் கிரிக்கெட் ஆடாமல் இருந்தார். பின்னர் அறுவை சிகிச்சை செய்த பின் மீண்டும் டெஸ்ட் களத்துக்கு வந்தார். மருத்துவ சோதனைக்கு பின்னரே அவரால் தொடர்ந்து ஆட முடியுமா எனத் தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com