வங்கதேச வீரர்கள் வேலைநிறுத்தம்: இந்திய தொடர் கேள்விக்குறி?

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளதால், இந்தியாவில் நடைபெறவுள்ள டி20, டெஸ்ட் தொடர்கள் கேள்விக்குறியாகி உள்ளன.
வங்கதேச வீரர்கள் வேலைநிறுத்தம்: இந்திய தொடர் கேள்விக்குறி?


ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளதால், இந்தியாவில் நடைபெறவுள்ள டி20, டெஸ்ட் தொடர்கள் கேள்விக்குறியாகி உள்ளன.
வங்கதேச கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆட உள்ளது. வரும் நவம்பர் 3-ஆம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் நடக்கிறது.
11 அம்ச கோரிக்கைகள்: இந்நிலையில் முதல் தர கிரிக்கெட்டில் ஆடும் வீரர்களுக்கு ஆட்ட ஊதியம்,, தற்போது 35 ஆயிரமாக உள்ளதை 1 லட்சம் வங்கதேச தாகாவாக உயர்த்த வேண்டும்.  முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு 50 சதவீதம் ஊதிய உயர்வு, அதிகரிக்கப்பட்ட பயணப்படி, வங்கதேச கிரிக்கெட் லீக்கை வர்த்தக முறையில் மாற்ற வேண்டும், மத்திய ஒப்பந்த ஊதியத்தை அதிகரிக்க வேண்டும், டாக்கா ப்ரீமியர் லீக் போட்டியில் திறந்தவெளி சந்தையில் வீரர்களை மாற்ற வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கதேச டி20 அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன், டெஸ்ட் அணி கேப்டன் மஹ்முத்துல்லா, முஷ்பிகுர் ரஹீம் உள்பட 50 வீரர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்த போராட்டம் மேற்கொண்டனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், எந்தவித கிரிக்கெட் ஆட்டங்களிலும் பங்கேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் பயிற்சியாளர்கள், உடலியக்கவியல் நிபுணர்கள், களப்பணியாளர்களுக்கு அதிக ஊதியம் தர வேண்டும் என சீனியர் வீரர் தமிம் இக்பால் கூறியுள்ளார்.
இந்திய தொடர் கேள்விக்குறி? இந்த போராட்டத்தால் வங்கதேசத்தில் தேசிய லீக் போட்டிகளுக்கு உடனடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நவம்பர் இந்திய தொடரும் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்காக இந்த வாரம் பயிற்சி முகாமும் தொடங்குவதாக இருந்தது. 
இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில்: இப்பிரச்னை வங்கதேச கிரிக்கெட் வாரிய உள் விவகாரம். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வங்கதேச வாரியம் எதுவும் கூறாதவரையில் நாங்கள் எந்த முடிவையும் எடுக்க மாட்டோம் எனத் தெரிவித்தன. அதே நேரம் பிசிசிஐ புதிய தலைவர் செளரவ் கங்குலிக்கு, வங்கதேச வீரர்கள், நிர்வாகிகளுடன் நல்லுறவு உள்ளது. இதனால் அவரால் இப்பிரச்னையை தீர்க்க முடியும் எனவும் கூறியுள்ளனர்.
கொல்கத்தாவிலும் ஒரு டெஸ்ட் ஆட்டம் நடக்கவுள்ளதால், வங்கதேச ரசிகர்கள் அதிகம் பேர் வருவர் எனத் தெரிகிறது. இதனால் கங்குலியின் பேச்சை அவர்கள் கேட்பார்கள் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் வாரிய சிஇஓ நிஜாமுதீன் செளதரி கூறுகையில்: இப்பிரச்னை குறித்து உரிய ஆலோசனை நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com