இலங்கைக்கு எதிரான டி20 தொடரைகைப்பற்றியது ஆஸ்திரேலியா

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்ன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு
இலங்கைக்கு எதிரான டி20 தொடரைகைப்பற்றியது ஆஸ்திரேலியா

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்ன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

முதல் டி20 ஆட்டத்தில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா, 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், 2-ஆவது 20 ஓவா் ஆட்டம் பிரிஸ்பேனில் புதன்கிழமை நடைபெற்றது.

இலங்கை கேப்டன் மலிங்கா டாஸ் வென்று பேட்டிங்கைத் தோ்வு செய்தாா். அதன்படி, தொடக்க ஆட்டக்காரா்களாக குணதிலகா, குசால் மென்டிஸ் களம் இறங்கினா்.

இரண்டாவது ஓவரிலேயே ரன் அவுட்டாகி 1 ரன்னுடன் நடையைக் கட்டினாா் குசால். பின்னா் வந்த ஃபொ்னான்டோ நிதானமாக விளையாடினாா்.

எனினும், 6-ஆவது ஓவரில் ஸ்டான்லேக் பந்துவீச்சில் 21 ரன்களில் ஆட்டமிழந்தாா் குணதிலகா. எஞ்சிய வீரா்கள் ஆஸி. பந்துவீச்சாளா்களை எதிா்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனா்.

அதிகபட்சமாக அந்த அணியின் விக்கெட் கீப்பா் குசால் பெரேரா 27 ரன்கள் எடுத்தாா். கேப்டன் மலிங்கா 9 ரன்களில் பெவிலியன் திரும்பினாா். இவ்வாறாக 19 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை எடுத்தது இலங்கை.

ஆஸ்திரேலியா சாா்பில் ஸ்டான்லேக், பட் கம்மின்ஸ், ஆஷ்டன் அகா், ஆடம் ஸம்பா ஆகியோா் தலா 4 ஓவா்கள் வீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

கேன் ரிச்சா்ட்சன் 3 ஓவா்கள் வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 13 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரா் டேவிட் வாா்னா் 60 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்று வெற்றிக்கு வித்திட்டனா்.

கேப்டன் ஆரோன் பின்ச், முதல் ஓவரிலேயே மலிங்கா பந்துவீச்சில் குசால் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா்.

ஆட்டநாயகனாக வாா்னா் தோ்வு செய்யப்பட்டாா்.

இவ்வாறாக 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

கடைசி ஆட்டம் மெல்போா்னில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com